1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: பெந். திரு.நாள். பின். 20-ம் ஞாயிறு
தேதி: 06/10/2024
வண்ணம்: பச்சை
திருமறை பாடங்கள்:
சங்கீதம்:
2. திருவசனம் & தலைப்பு
*தோள்கொடுக்கும் சபையார்*
அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்ளுகிறேன். அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது.
பிலிப்பியர் 4:3 (பவர் திருப்புதல்)
என் உண்மையான தோழரே, அவர்களுக்கு உதவி செய்யுமாறு உம்மிடம் வேண்டுகிறேன். ஏனெனில் அவர்கள் கிளமந்தோடும், மற்ற உடன் உழைப்பாளரோடும் என்னோடும் சேர்ந்து நற்செய்திக்காகப் போராடினார்கள். அவர்களுடைய பெயர்கள் வாழ்வோரின் நூலில் எழுதப்பட்டுள்ளன. (திருவிவிலியம்)
3. ஆசிரியர் & அவையோர்
அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் பிலிப்பியர் நிருபத்தின் ஆசிரியர் என்பது புற மற்றும் அக சான்றுகள் தெளிவுப்படுத்துகிறது.
பிலிப்பியில் உள்ள கிறிஸ்தவர்களுக்கும் எங்கும் உள்ள விசுவாசிக்களுக்கும் இந்த நிருபம் எழுதப்பட்டதுப்பட்டது.
4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
சுமார் கி. பி. 62-ல் பவுல் ரோம சிறையில் வைத்து இந்த நிருபத்தை எழுதினார் (பிலி.1:13, 4:22).
பவுல் தன்னுடைய இரண்டாம் மிஷனரி பயணத்தின் போது பிலிப்பு சபையை நிறுவினார் (அப்.16:11-40).
பவுல் சிறையில் இருந்த போது அவருக்கு ஏற்ற வேளையில் பிலிப்பு விசுவாசி எப்பாபிரோ தீத்து மூலம் உதவி செய்த பிலிப்பி சபையாருக்கு நன்றி சொல்லி எழுதிய நிருபமே பிலிப்பியிர் நிருபம்.
பிலிப்பு திருச்சபையில் ஒன்றாக இருந்தவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டிருந்தார்கள் அதனால் பவுல் நீங்கள் கிறிஸ்துவுக்குள் ஒரே சிந்தையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் (பிலி.4: 1,2,4,6,7).
5. திருவசன விளக்கம்
பிலிப்பியர் 4:1-3-ல் பவுல் பிலிப்பியர் திருச்சபையில் உள்ள மிக முக்கியமான பிரச்சனையை குறித்து பவுல் எழுதுகிறார். குறிப்பாக பிலிப்பியர் திருச்சபையில் உள்ள மக்களுக்குள்ளே சிலர் ஐக்கியமாக (Unity) இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறார்.
வசனம் 2-ல் புத்தி சொல்லுகிறேன் (entreat) என்கிற வார்த்தை சபை நல்லிணக்கத்திற்கு பவுல் அப்போஸ்தலன் கொடுக்கும் முக்கியத்துவத்தை (strong appeal) குறிக்கிறது. பவுல் அப்போஸ்தலன் எயோதியாள் & சிந்திக்கேயாள் என்பவர்களின் பெயரை குறிப்பிடுவதின் மூலம் அவர்களுடைய பிரிவினை எந்த அளவுக்கு பிலிப்பியர் திருச்சபையில் பாதிப்பை ஏற்படுத்தினது என்பதை காண்பிக்கிறது. அதனால்தான் வசனம் 3-ல் பவுல் அப்போஸ்தலன் தன்னுடைய உடன் வேலையாளை ( எப்பாபிரா தீத்து-வாக இருக்கலாம்) அவர்கள் இருவரும் ஒரே சிந்தையோடு செயல்படுவதற்கு உதவி செய்யும்படி வலியுறுத்துகிறார். ஒருவேளை எயோதியாளும், சிந்திக்கேயாளும் ஒன்றிணைவதற்கு முயற்சி எடுத்து அது முடியாமல் போயிருக்கலாம் அதனால்தான் பவுல் இங்கே *உதவி செய்* என்கிற வார்த்தையை பயன்படுத்தியிருக்கலாம்.
இந்த இருவரும் (எயோதியாள் & சிந்திக்கேயாள்) பிலிப்பியர் பட்டணத்தில் சுவிசேஷத்தை அறிவிக்க பவுல் அப்போஸ்தலரோடு பிரயாசப்பட்டவர்கள் (athletic metaphor= போராட்டம்). பவுல் அப்போஸ்தலன், கிலேமெந்த், மற்ற உடன் வேலையாட்களோடு கூட சுவிசேஷத்தை அறிவிக்க போராடினவர்கள். (தோள் கொடுத்தவர்கள்). அதனால் தான் அவர்கள் இருவரும் ஒரே சிந்தையோடு செயல்பட வேண்டும் என்று பவுல் அப்போஸ்தலன் பிரயாசப்படுகிறார்.
6. இறையியல் & வாழ்வியல்
சுவிசேஷத்தை அறிவிப்பதற்கும், திருச்சபையை உருவாக்குவதற்கும் ஒரே சிந்தையும், நல்லிணக்கமும் மிக முக்கியமானது. திருச்சபையார் ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து தாங்கும்போது தான் திருச்சபைகள் வளர்ந்து பெருகும்.
7. அருளுரை குறிப்புகள்
1) திருச்சபை உருவாக்க( சுவிசேஷம் அறிவிக்க ) தோள் கொடுக்கும் சபையார் (v. 3b).
2). திருச்சபையின் ஐக்கியத்திற்கு தோள் கொடுக்கும் சபையார்(v. 3a)
0 Comments