Divine Mishpat for the Redemption
மீட்பிற்கான இறைநீதி
(ரோமர் 3. 24 - 25)
திருமறையில் மிஷ்பாட் (நீதிக்கான எபிரெய வார்த்தை) என்பது வெறும் சட்ட நியாயம் மட்டுமல்ல, விஷயங்களைச் சரிசெய்யவும், பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாக்கவும், உடைந்த உறவுகளை மீட்டெடுக்கவும் கடவுளின் அழைப்பாகும்.
ஆம், நீதியின் கடவுள், பாவ மனுக்குலத்தைத் தண்டிக்க விரும்பவில்லை; மாறாக, கிறிஸ்து இயேசுவின் சிலுவையின் வாயிலாக மீட்பை வழங்கினார்.
1. மீட்பு: இறைநீதிக்கான இறைவிருப்பம்
Redemption: God's Will for the Divine Mishpat
ரோமர் 3. 24 - 25 வசனங்களில், பவுல் அடிகளார், மனுக்குலத்தை தண்டியாமல், பொறுத்துக்கொண்டதைக் குறிப்பிடுவது, இறை நீதியில் (மிஷ்பத்) மனுக்குலம் மீட்கப்படுகின்ற, பிதாவின் விருப்பத்தைக் குறிக்கிறது. "Redemption is not a suspension of divine justice, but a fulfillment of it."
2. மீட்பு: கிறிஸ்துவின் நீதியாக்கும் பரிகாரம்
Redemption: The Justifying Atonement of Christ
மத்தேயு 12:18-21 & ஏசாயா 42 கிறிஸ்துவை நீதியின் பணியாளராக அடையாளப்படுத்துகிறது. "Jesus, the Messiah) is the one who will "bring forth justice (Greek: krisis, related to mishpat) quietly and gently." சிலுவையில், மிஷ்பாத்தும் கிருபையும் ஒன்றிணைகின்றன. கிறிஸ்து பாவத்திற்கான பரிகார தண்டனையைச் சுமந்து, நீதியின் மீட்பை வழங்கினார் (ரோமர் 3:25-26).
3. மீட்பு: மனிதகுலத்திற்கான நீதி
Redemption: The Justification for the Humanity
ரோமர் 3:25-26 வசனங்கள், கடவுளின் சித்தப்படி, மனுக்குலத்தின் இழந்துபோன உறவை மறுசீரமைத்து நீதியாக்குவதையும் விளக்குகிறது. இயேசுவின் வாழ்க்கையும் போதனைகளும் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பராமரித்து, சரியான உறவுகளை நிறுவி, கடவுளின் நீதியை உலகிற்குக் கொண்டு வருவதாகும். "Justification of humanity isn't earned; it's a free gift of grace received through faith in Christ."
நிறைவாக....
2026 ஆம் ஆண்டின் தவக்காலத்தில் பயணிக்க இருக்கின்ற நாம், நம்மை நாமே நிதானித்து அறிந்து, இறைநீதியில் நீதியடைய நம்மை அர்ப்பணிப்போம். "இறைநீதியில் மீட்படைந்து நீதிமான்களாவோம்."
மேயேகோ

0 Comments