Divine Mishpat Series - 1 / 2026
ஏசாயா 30:18 இல் "ஏனெனில்" என்ற வார்த்தை "நீதி செய்கிற கடவுள்" என்ற பதத்தை முக்கியப்படுத்துகிறது. தமிழ் திருமறையில் நீதி என்ற வார்த்தை Justice (mishpat மிஷ்பாட்) மற்றும் Righteousness (tzedakah) என்ற இரண்டுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏசாயா 30: 18 இல் Mishpat - מִשְׁפָּט என்ற மூல வார்த்தை உள்ளது. இதன் அர்த்தம், என்பது நீதி, தீர்ப்பு, கட்டளை அல்லது சட்டப்பூர்வ உரிமை. இது நியாயமான நடவடிக்கைகள், நெறிமுறை நடத்தை (Ethical Conduct) மற்றும் கடவுளின் தரத்தை (The Standard of God) உள்ளடக்கியது. இது கடவுள் கொடுக்கும் தண்டனையை அல்ல; மறு சீரமைக்கும் செயலைக் குறிக்கும்.
"Mishpat and Tzedakah (The Divine Duo)'
These two words almost always appear together. While Tzedakah (righteousness) refers to a standard of right relationship, Mishpat is the action taken to correct a wrong. If righteousness is the 'norm,' mishpat is the 'rectification.' Misphat is not like punishment, but the restorative action."
மேலும், இந்த அதிகாரத்தின் பின்னணியும் வரவிருக்கும் அசீரிய அச்சுறுத்தலுக்கு எதிராக யூதா எகிப்துடன் அவநம்பிக்கையான கூட்டணி வைத்து கடவுளின் வாக்குறுதியளிக்கப்பட்ட பாதுகாப்பிற்குப் பதிலாக பலவீனமான மனித சக்தியான எகிப்தை நம்பும் இறைநம்பிக்கை அற்ற சூழலில், கர்த்தருக்காகக் காத்திருப்பவர்களுக்கு நீதி செய்ய கடவுள் காத்திருக்கிறார் என்பதை கற்பிக்கிறது.
1. எதிர்மறை சூழலில் நீதி
"ஆனாலும்" என்ற வார்த்தை, ஒரு எதிர்மறை சூழலைச் சுட்டிக்காட்டுகிறது. ஏசாயா 30: 15இல் சொல்லப்பட்ட நேர்மறை வாக்குக்கு எதிராக மக்கள் செயல்பட விரும்பயதின் விளைவு, ஏசாயா 30:16-17 இல் எதிர்மறை சூழலை உருவாக்கியது. பயம் நிறைந்த இந்தச் தோல்வியின் சூழல்; ஆனாலும், ஆண்டவர் நீதி செய்கிறவர் என்பதை இந்த வசனம் உணர்த்துகிறது.
2. இரக்கத்துடன் கூடின நீதி
"இரங்கும்படி & மனதுருகும்படி" என்ற வார்த்தைகள் கடவுளின் இரக்கக் குணத்தை வலியுணர்த்துகின்றன. ஏசாயா 30.19.இல் "உருக்கமாய் இரங்கி" என்று வருகிறது. இந்தக் இரக்கக்குணம் நீதி செய்ய எழுந்து அதை நிலைநாட்டும் கடவுளில் முழுமையாக வெளிப்படுகிறது.
3. காத்திருக்கும் அனைவருக்கும் நீதி
"காத்திருக்கிற அனைவரும்" என்ற வார்த்தை, எகிப்துக்கு செல்லாமல், கடவுளின் சித்தம் நிறைவேற காத்திருக்கும் மக்களைக் குறிக்கிறது. இவர்கள் தான் பாக்கியவான்கள். இதிலிருந்து கடவுள், பட்சபாதம் இல்லாமல், கடவுளை நம்பும் அனைவருக்கும் நீதி செய்கிறவர் என்பது உறுதியாகிறது.
நிறைவாக...
நீதி செய்ய காத்திருக்கும் கடவுள், தம் இரக்க குணம் மாறாமல், நீதியை நிலைநாட்டி, அவருக்குக் காத்திருக்கும் அனைவரையும் பாக்கியவான்களாக்கி நீதியின் பாதையில் நடத்துவது உறுதி.
எழுதியவர்
சகோ. யே. கோல்டன் ரதிஸ் M.Sc, B.A, B. D.,

0 Comments