Ad Code

யூதாஸ் காரியோத்து Judas Iscariot • Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 20
யூதாஸ்: உணர்ந்தும் மாறவில்லையே 

1. பெயர்: யூதாஸ் காரியோத்து Judas Iscariot
2. அர்த்தம்: 
எபிரேய பெயரின் அர்த்தம் 'துதி' அல்லது 'புகழ்'
காரியோத்து என்பது அவர் வாழ்ந்த பகுதியைக் குறிக்கிறது.

3. சிறுகுறிப்பு: 
• இயேசு கிறிஸ்து தெரிந்துகொண்ட 12 சீடர்களில் ஒருவர்.
• சீடர்கள் குழுவில் பணப்பையை வைத்துக்கொண்டு பொறுப்பு வகித்தவர்.
• முத்தமிட்டு இயேசுவைக் காட்டிக்கொடுத்தார்.
• தற்கொலை செய்துகொண்டார்.

4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
இயேசுவோடு நெருங்கிப் பழகி, அவருடைய அற்புதங்களைக் கண்டும், யூதாஸின் உள்ளத்தில் இருந்த பண ஆசை அவரைச் சாத்தானின் சோதனைக்குள்ளாக்கியது. தவறு செய்தப் பின்பும், பின்னர் தன் தவறை உணர்ந்து, மனமுடைந்து, அந்தப் பணத்தைத் தேவாலயத்தில் எறிந்துவிட்டான். ஆனால் மனம் மாறவில்லை (Remorse vs Repentance). இறுதியில் நான்றுகொண்டு (தூக்கிட்டு) தற்கொலை செய்துகொண்டார்.

5. வேதாகம பகுதி (வாசிக்க): 
மத்தேயு 26:14-16, 47-50 (இயேசுவைக் காட்டிக்கொடுத்தல்)
மத்தேயு 27:3-10 (யூதாஸின் முடிவு)
யோவான் 12:4-6 (யூதாஸின் பண ஆசை)

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

Post a Comment

0 Comments