Ad Code

வானகம் வாழ்ந்திடும் | பரமண்டல ஜெபப் பாடல் | Song of Lord's Prayer

கர்த்தருடைய ஜெபப் பாடல்
Lord's Prayer Song

1. வானகம் வாழ்ந்திடும் எங்கள் தந்தாய் 
    வாழ்க உம் திரு நாமம்
    வருக உம்அரசு பெருக உம்விருப்பம் 
    வாழ்க உம் திரு நாமம்

2. வானகம் போல வையகம் தனிலும் 
   வாழ்க உம் திரு நாமம்
   தினமெங்கள் உணவை தயவுடன் தாரும்      
   வாழ்க உம் திரு நாமம்

3. பாவங்கள் யாவும் பொறுத்தெமை ஆளும்  .     
    வாழ்க உம் திரு நாமம்
    பிறர்பிழை நாங்கள் பொறுப்பது போல 
    வாழ்க உம் திரு நாமம்

4. சோதனை நின்றெமை விலக்கியேகாரும்     
    வாழ்க உம் திரு நாமம்
    தீவினை யிருந்தே மீட்டிட வாரும் 
    வாழ்க உம் திரு நாமம்

5. ஆட்சியும் ஆற்றலும் அனைத்துள மாண்பும் 
    வாழ்க உம் திரு நாமம்
    இன்றுபோல் என்றும் இறைவனே உமதே   
   வாழ்க உம் திரு நாமம்

6. ஆமென் ஆமென் அநாதியாய் ஆமென் 
    வாழ்க உம் திரு நாமம்
    ஆமென் ஆமென் அநாதியாய் ஆமென் 
    வாழ்க உம் திரு நாமம்

Post a Comment

0 Comments