Ad Code

வானும் புவியும் | அப்போஸ்தலருடைய விசுவாச அறிக்கை பாடல் | Song of Apostles' Creed

அப்போஸ்தல பற்றுறுதி அறிக்கை 
Apostle's Creed

1. வானும் புவியும் வையகமும் 
    வனைந்த வல்ல பரனான
    வானகத் தந்தையை நம்புகிறேன் - 2

2. அவரொரே திருமகன் கன்னியிடம் 
    அனைவரின் நாதர் கிறிஸ்துவாய்
    அவதரித்ததையும் நம்புகிறேன் - 2

3. பிலாத்துவின் கீழவர் சிலுவையதில் 
    பெரும்பாடுகளுடன் இறந்தடங்கி
    பெருங்குழி புகுந்ததை நம்புகிறேன் - 2

4. உயிரோடெழுந்தார் மூன்றாம் நாள் 
    உயிரே எழுந்து பரன்வலமே
    உடனிருப்பதையும் நம்புகிறேன் – 2

5. உயிருள்ளோரும் இறந்தோரும் 
    உண்மையாம் தீர்ப்பை அடைந்திடவே
    உறுதியாய் வருவார் நம்புகிறேன் – 2

6. தூயாவி தூயோர் சபை உறவு 
    பாவமன்னிப்பு உடல் உயிர்ப்பு
    மெய்நிலை வாழ்வையும் நம்புகிறேன் - 2
                                       ஆமென் ஸ்சுவாமீ - 3

Post a Comment

0 Comments