Ad Code

நிசேயா விசுவாச அறிக்கை பாடல் | Nicean Creed Hymn


Nicean Creed
CSI முறைமையில் நற்கருணை வழிபாட்டில் வரும்


1.உலகும் வானும் செய்தாளும்
   ஒப்பில் சர்வ வல்லவராய்
   இலகு மருளாம் தந்தையாம்
   எம்பிரா மை நம்புகிறேன்
   
2.அவரொரு பேறா மைந்தனுமாய்
   ஆதி முதலெங் கர்த்தனுமாய்த்
   தவறி லேசுக் கிறிஸ்துவையும்
   சந்தத மேயான் நம்புகிறேன்
   
3.பரிசுத் தாவி அருளதனால்
   மடிமேல் கன்னி மரியிடமாய்
   உருவாய் நாரவ தீரமதாய்
   உதித்தா ரெனவும் நம்புகிறேன்
   
4.பொந்துபிலாத்ததி பதி நாளில்
   புகலறு பாடுகளை யேற்று
   உந்துஞ் சிலுவையில் அறையுண்டு
   உயிட்விட்டார் என நம்புகிறேன்
   
5.இறந்தே அடங்கிப் பாதாளம்
   இறங்கி மூன்றாம் தினமதிலே
   இறந்தோரிட நின்றே உயிரோடு
   எழுந்தா ரெனவும் நம்புகிறேன்
   
                     ஆமென்... சுவாமி
                     ஆ... மென் சுவாமி
                     ஆமென்... சுவாமி
                     
6.சந்தத மோட்சம் எழுந்தருளிச்
   சருவ வல்ல பரனான
   எந்தை தன்வல பாரிசமே
   யிருக்கின் றாரென நம்புகிறேன்
   
7.உயிருள் ளோரை மரித்தோரை
   உத்தம ஞாயந் தீர்த்திடவே
   ஜெயமாம்த் திரும்ப வருவாரெனச்
   சிந்தை யார் நம்புகிறேன்
   
8.பரிசுத் தாவியை நம்புகிறேன்
   பரிசுத்தமா பொதுச் சபையும்
   பரிசுத்தர் களின் ஐக்கியமும்
   பரிவாய் உண்டென நம்புகிறேன்
   
9.பாவ மன்னிப்பு உளதெனவும்
   மரித்தோர் உயிர்த்தெழு வாரெனவும்
   ஒவா நித்திய ஜீவனுமே
   உள தெனவும் நம்புகிறேன்
   
                     ஆமென்... சுவாமி
                     ஆ... மென் சுவாமி
                     ஆமென்... சுவாமி

   




Post a Comment

0 Comments