பெலிக்ஸ்: மனசாட்சியின் உணர்த்துதலைத் தள்ளிப்போடக் கூடாது
1. பெயர்:
பெலிக்ஸ் • Felix (Governor)
2. அர்த்தம்:
மகிழ்ச்சியான
3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
வேதப்பகுதியின் சுருக்கம்:
• சகாதிபதி கிலவுதியு லீசியா பவுலைப் பாதுகாப்பாகச் செசரியாவுக்கு அனுப்பி ஆளுநர் பெலிக்ஸிடம் ஒப்படைக்கிறார். வழக்கறிஞர் தெர்த்துல்லு பவுலின் மீது குற்றம் சுமத்த, பவுல் அதற்குத் தகுந்த பிரதிவாதம் பண்ணுகிறார் (அப் 23:24–24:23).
• பெலிக்ஸும் அவன் மனைவி துருசில்லாளும் பவுலிடம் கிறிஸ்துவைப் பற்றிய விசுவாசத்தைக் கேட்கும்போது, பவுல் நீதி, இச்சையடக்கம், வரப்போகும் நியாயத்தீர்ப்பு பற்றிப் பேசுகிறார். அதைக் கேட்டு பெலிக்ஸ் பயந்து நடுங்கினாலும், தேவ உணர்த்துதலை ஏற்றுக்கொள்ளாமல் தள்ளிப்போடுகிறான் (அப் 24:24–25).
• லஞ்ச எதிர்பார்ப்பினாலும், யூதர்களைப் பிரியப்படுத்தும் எண்ணத்தினாலும் பவுலுக்கு நீதி வழங்காமல், அவரை இரண்டு ஆண்டுகள் சிறையிலேயே அடைத்து வைக்கிறான் (அப் 24:26–27).
4. வரலாற்றுக் குறிப்புகள்
வரலாற்றுக் குறிப்புகளின் சுருக்கம்:
• பின்னணியும் அதிகாரமும்: கி.பி. 52–60 வரை யூதேயாவின் 5-ஆம் ரோம ஆளுநராகப் பணியாற்றிய பெலிக்ஸ், அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகித் தன் சகோதரன் பல்லாஸின் செல்வாக்கினால் இப்பதவியைப் பெற்றார்.
• கொடூர குணமும் திருமணமும்: வரலாற்று ஆசிரியர் தாசிடஸ் குறிப்பிட்டபடி, அடிமை மனப்பான்மையுடன் கொடூரமும் காமமும் நிறைந்த ஆட்சி செய்த இவர், யூத இளவரசி துருசில்லாவை மணந்துகொண்டார்.
• பதவியிழப்பு: இவனது அக்கிரம ஆட்சியினாலும் கலவரங்களை அடக்கிய கொடூரத்தினாலும் எழுந்த புகார்களால் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, பொர்கியு ஃபெஸ்து என்பவரால் மாற்றப்பட்டார்.
5..கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
சத்தியத்தையும் வரப்போகும் நியாயத்தீர்ப்பையும் பற்றிப் பவுல் பேசியபோது பெலிக்ஸ் பயந்து நடுங்கினான். ஆனால், அந்த கணத்திலேயே மனந்திரும்புவதற்குப் பதிலாக, பிறகு என்று தள்ளிப்போட்டான். இறைவனுடைய உணர்த்துதலையும் மனமாற்றத்தையும் தள்ளிப்போடுவது பேரழிவிற்கே வழிவகுக்கும்
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

0 Comments