பாலர் ஞாயிறு வழிபாட்டு முறைமைை
முகவுரை பாடல்
சிறுவர்கள் என்னிடம் சேரத் - தடை
செய்யா திருங்களென்றார் மனதார;
பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்;
பாக்கியமெல்லாம் பறந்து ஜொலிக்கும்.
காலமே தேவனைத் தேடு - ஜீவ
காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு
காலமே தேவனைத் தேடு.
ஆரம்ப ஜெபம்
ஆரம்ப பாடல்
பிழை உணர அழைப்பு
தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். (நீதிமொழிகள் 28:13)
தகப்பனை நோக்கி: ஏன் ஜநிப்பித்தாய் என்றும், தாயை நோக்கி: ஏன் பெற்றாய் என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ! (ஏசாயா 45.10)
நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால் இந்தப் பிள்ளையைப் போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான். (மத்தேயு 18: 3 - 4)
நாம் வாசிக்க கேட்ட இந்த வேத வசனங்களின்படி, நம்மைத் தாழ்த்தி, பரம கிருபாசனத்தண்டையில் முழங்காற்படியிட்டு நம்முடைய பாவங்களை அறிக்கையிடுவோம்.
குழந்தைகள் பாவ அறிக்கை
(முதலாவது நான் சொல்ல சொல்ல பிள்ளைகள் மாத்திரம் சொல்லவும்.)
எங்கள் அன்பின் தந்தையே, ஒருவன் சிறுபிள்ளையைப் போலானால் மட்டுமே பரலோக வாழ்வை பெற்றுக்கொள்ள முடியும் என்று எங்களை முன்னிறுத்தி இயேசு இரட்சகர் கற்பித்தாரே. ஆனால் நாங்கள் உமது கட்டளைகளையும் கற்பனைகளையும் கடைபிடிக்க தவறியிருக்கிறோம். எங்கள் பெற்றோர்களைக் கனம்பண்ண மறுத்ததை நினைத்து உண்மையாய் வருந்துகிறோம். எங்கள் ஆசிரியர்களுக்கும் பெரியாருக்கும் கீழ்ப்படியாமல் இருந்தமைக்காகவும் துக்கப்படுகிறோம். ஞாயிறு பாடசாலை வகுப்புகளில் ஒழுங்காக கலந்து கொள்ளாத எங்கள் அஜாக்கிரதை தன்மைக்காக துக்கப்படுகிறோம். எங்கள் அன்பற்ற தன்மைகளையும், மற்றவர்களை மன்னிக்க மறுத்த நேரங்களையும், உற்சாகத்தோடு பிறருக்கு உதவிசெய்ய தயங்கிய சந்தர்ப்பங்களையும் நினைத்து வருந்துகிறோம். பரிசுத்தத்தை விரும்பும் இயேசு கிறிஸ்துவானவர் எங்களுக்காகவே மனிதராக பிறந்து, நாளுக்கு நாள் ஞானத்தில் வளர்ந்து, கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராக வாழ்ந்தாரே. அவர் அருளும் பாவ மன்னிப்பை நாங்கள் பெற்றுக் கொண்டு, இந்த உலகத்தில் அவரை முன்மாதிரியாகக் கொண்டு வாழ எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று மிகுந்த தாழ்மையோடு வேண்டிக் கொள்ளுகிறோம் நல்ல பிதாவே. ஆமென்.
பெற்றோர் பாவ அறிக்கை
(இப்போது நான் சொல்ல சொல்ல பெற்றோர் மாத்திரம் சொல்லவும்.)
எங்கள் பரம தந்தையே, இந்த குழந்தையை எனக்காக வளர்த்திடு என்று சொல்லி, எங்கள் கரங்களில் கொடுத்த பிள்ளைகளை, உம்முடைய வழியில் நடத்த தவறிய சந்தர்ப்பங்களை எண்ணி உண்மையாய் வருந்துகிறோம். அன்பையும் பரிவையும் ஆதரவையும் காட்டுவதற்கு பதிலாக குழந்தைகளை கோபப்படுத்தியதற்காக வருந்துகிறோம். எங்களைப் பார்த்து நடக்கிற குழந்தைகளுக்கு, நாங்கள் நல்ல முன்மாதிரியை காட்ட தவறிய நேரங்களை எண்ணி மிகவும் துக்கப்படுகிறோம். உமது கற்பனைகளையும், கட்டளைகளையும், விசுவாசத்தையும் கற்றுக் கொடுக்காமல், பிள்ளைகளை நீதியின் பாதையில் நடத்த தவறியிருக்கிறோம். தயவாய் எங்கள் குற்றங்களை மன்னித்து, நாங்களும் எங்களுக்கு நீர் கொடுத்த பிள்ளைகளும் இந்த சமுதாயத்தில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் வாழ உதவிசெய்ய வேண்டுமென்று மிகுந்த தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம் நல்ல பிதாவே. ஆமென்.
பாவ விமோசனம் (குரு / சபை ஊழியர்)
நம் தந்தையாம் கடவுள், நாம் செய்த தப்பிதங்களுக்காக, தம்முடைய ஒரே குமாரனை நமக்காக பலியாகக் கையளித்து, நம்மை மீட்டிருக்கிறார். அவ்விதமாக தம்முடைய அன்பை வெளிப்படுத்திய இயேசு கிறிஸ்து நம்மையும் நேசித்து அவருடைய பிள்ளைகளாகும் அதிகாரத்தை கொடுத்திருக்கிறார். நிச்சயமாக மனந்திரும்பிய நம்மை, அவர் தம்முடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டு, என்றும் தூய ஆவியின் அருளால் நம்மை நித்திய ஜீவனுக்கு நேராக வழிநடத்துவாராக. ஆமென்.
துதி வேளை
தொடர்ந்து கர்த்தரின் சமுகத்தில் நமது துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுப்போமாக. சபையார் மறுமொழியாக ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக என்று சொல்ல வேண்டும்.
1. இந்த நாள் வரைக்கும் ஆண்டவர் நம்முடைய பிள்ளைகளை பாதுகாத்து, அவருடைய ஞானத்தினால் நிறைத்து வழி நடத்துகிற கிருபைகளுக்காக அவரைத் துதிப்போமாக.
ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக.
2. திருநெல்வேலி திருமண்டில பாலியர் ஐக்கிய சங்கம் மூலம் நடக்கும் ஞாயிறு பாடசாலை, மாதாந்திர பத்திரிக்கை, முகாம்கள், நேரடி மற்றும் ஆன்லைன் ஊழியங்கள் எல்லாவற்றிற்காகவும் கர்த்தரை துதிப்போமாக.
ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக.
3. நமது திருமண்டல கல்வி நிறுவனங்கள் மற்றும் கருணை இல்லங்கள் வாயிலாக நடைபெறும் ஆன்மீக மற்றும் சமூக சேவைகளுக்காகவும், அதில் படிக்கின்ற பிள்ளைகளுக்காவும், பணியாற்றுகிற ஆசிரியர்களுக்காகவும் கர்த்தரை துதிப்போமாக.
ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக
கர்த்தர் கற்பித்த ஜெபம்
பரமண்டலங்களிலிருக்கிற....... ஆமென்.
ஆ. ந. ஆண்டவரே எங்கள் உதடுகளை திறந்தருளும்
சபை. அப்பொழுது எங்கள் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.
ஆ. ந. ஆண்டவரே எங்களை இரட்சிக்க விரைவாய் வாரும்.
சபை. ஆண்டவரே எங்களுக்கு சகாயம் பண்ண தீவிரியும்.
(எல்லாரும் எழுந்து நிற்க)
ஆ. ந. பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக.
சபை. ஆதியிலும் இப்பொழுதும் எப்பொழுதுமான சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
ஆ.ந. கர்த்தரை துதியுங்கள்.
சபை. கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.
முறைமுறையாக வாசிக்க வேண்டிய சங்கீதம்
சங்கீதம் 8
பிதாவுக்கும்.....
அப்போஸ்தல விசுவாச அறிக்கை:
வானத்தையும் பூமியையும்.... ஆமென்.
முதலாம் வேதபாடம்
(பஞ்சாங்கம்)
சிறப்பு பாடல் / நிகழ்வு : ஞாயிறு பாடசாலை
இரண்டாம் வேதபாடம்
(பஞ்சாங்கம்)
மன்றாட்டு வேளை (ஜெபம் பண்ணக்கடவோம்)
தொடர்ந்து கர்த்தரின் பாதத்தில் நமது ஜெப மன்றாட்டுகளை வைப்போமாக. சபையார் மறுமொழியாக, எங்கள் விண்ணப்பங்கள் உம்மிடத்தில் சேர்வதாக என்று சொல்ல வேண்டும்.
1. நமது தேசத்திலுள்ள எல்லா சிறுவர் சிறுமியரும் இயேசுகிறிஸ்துவைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, இவ்வுலகில் அவர் வாழ்ந்தது போல, ஞானத்திலும், வளர்த்தியிலும், கடவுளுடைய கிருபையிலும், மனுஷர் தயவிலும் வளர்ந்து பெருக வேண்டுமென்று ஆண்டவரை நோக்கி ஜெபிப்போமாக.
எங்கள் விண்ணப்பங்கள் உம்மிடத்தில் சேர்வதாக.
2. எல்லாக் குழந்தைகளுக்கும் போதுமான அடிப்படை கல்வி, மருத்துவம், பாதுகாப்பு மற்றும் ஆதரவு கிடைக்கவும், எதிர்காலத்தில் சிறந்த வாழ்வை பெற்றிடவும் வேண்டுமென்று ஆண்டவரை நோக்கி ஜெபிப்போமாக.
எங்கள் விண்ணப்பங்கள் உம்மிடத்தில் சேர்வதாக
3. இளம்பருவத்திலேயே குற்ற செயல்களில் ஈடுபட்டு சிறையில் இருக்கின்ற மற்றும் அத்தகையவர்களால் பாதிப்புக்குள்ளான சிறுவர் சிறுமியர் அனைவருடைய மறுவாழ்வுக்காகவும் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போமாக.
எங்கள் விண்ணப்பங்கள் உம்மிடத்தில் சேர்வதாக.
பாலர் ஞாயிறு சுருக்க ஜெபம்
(சுருக்க ஜெப புத்தகம்)
அறிவிப்புகள்
சிறப்பு பாடல் / நிகழ்வு : ஞாயிறு பாடசாலை
பிரசங்கம்
காணிக்கை பாடல்
ஞாயிறு பாடசாலை ஆசிரியர்கள்
முடிவு ஜெபம்
அசீர்வாதம் (குரு / சபை ஊழியர்)
பாலரின் நேசராம் இயேசுகிறிஸ்துவின் அருளும், பரமபிதாவின் அன்பும், பரிசுத்த ஆவியானவரின் நட்புறவும் உங்களனைவரோடுங்கூட என்றென்றைக்கும் இருப்பதாக. ஆமென்.
முடிவு கவி
எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா
உந்தன் வீடாய்க் கொள்ளும் இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
உந்தன் வீடாய்க் கொள்ளும் இயேசு நாயகா
மாம்சக்கிரியை போக்கும் இயேசு நாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா
- ஆமென்.
பின்னுரை (குரு / சபை ஊழியர்)
கர்த்தர் உங்களோடு இருப்பாராக.
அவர் உமது ஆவியோடும் இருப்பாராக.
இறை சமாதானத்தோடு சென்று வாருங்கள்
கர்த்தருடைய நாமத்தினாலே ஆமென்.
துணை நின்ற நூல்கள்
TDCM Special Order of Service
Common Prayer Book
Ganvensan Geethangal
Geethangalum Geerthanakkalum
5 Comments
Valthukal
ReplyDeleteThank You
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteGood work....
ReplyDeleteThank You
Delete