Ad Code

பாலியர் சங்க வரலாறு | History of TDCM | திருநெல்வேலி திருமண்டல சிறுவர் ஊழியம்


இந்தியாவிலேயே சிறுவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மிகப் பழமையான மற்றும் இன்றும் செயல்பட்டு வருவது நம் திருநெல்வேலி திருமண்டில பாலியர் சங்கம் (Baliyar Sangam) ஆகும்.

Baliyar Sangam History 

திருநெல்வேலி பகுதிக்கு மிஷெனெரிகள் வரத்தொடங்கியது முதலே சிறுவர்கள் மத்தியில் ஊழியம் தொடங்கியது எனலாம். ஆதிகால மிஷனரிகள் கல்விப்பணியில் ஆர்வமுடன் செயல்பட்டதற்கு அநேக வரலாற்று சான்றுகள் நம்மிடையே உள்ளன.

சிறப்பாக, சிறுவர்கள் மத்தியில் ஊழியம் செய்வதற்காக, S.G. மதுரம், ஞான சிகாமணி, ஆசீர்வாதம், G. தேவ தாசன், சாமுவேல் பாக்கியநாதன் ஆகிய 5 பேரும் இணைந்து ஜெபித்து எடுத்த முயற்சியினால் , 20.06.1891 அன்று பாலியர் பக்தி விருத்தி சங்கம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.  "சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்" என்ற இயேசுவின் வார்த்தையை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன் முதல் தலைவராக நீதிபதி சாலமோன் ஞானியும், முதல் காரியதரிசியாக பாக்கியநாதன் அவர்களும் செயல்பட்டனர்.

logo of TDCM

ஞாயிறு ஆராதனை முடிந்தவுடன் 20 நிமிடங்கள் ஞாயிறு பாடசாலையானது கிராம சபைகளில் நடத்தப்பட்டது. 1892 ஆம் ஆண்டு முதல் சேகர அளவில் பாலர் மனமகிழ்ச்சி பண்டிகை கொண்டாட முடிவு செய்யப்பட்டது. "பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும்" என்ற பாடல் எழுதப்பட்டு, பாலர் ஞாயிறு வழிபாட்டில் சிறப்பாக பாடப்பட்டது.

தினமும் பிள்ளைகள் வேதம் வாசிப்பதை ஒழுங்குபடுத்தும் வண்ணம் பாலியர் நேசன் என்ற சிறுவர்களுக்கான பத்திரிக்கை தொடங்கப்பட்டது. ஞாயிறு பாடசாலை பாடப் புத்தகங்கள் மூன்றாண்டு சுழற்சி முறையில் பிகினர், பிரைமரி, ஜூனியர், இண்டர் மற்றும் சீனியர் என்ற பிரிவுகளில் கீழ் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்.


பாலியர் நேசன் தாத்தா என்று அன்போடு அழைக்கப்பெறும் அருட்திரு. நவமணி டேனியல் ஐயரவர்கள் திருநெல்வேலி திருமண்டல பாலியர் சங்கச் செயலாராக 1956 முதல் 1969 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்கள். அவர்கள் காலத்தில் தான் பாலியர் சங்க அலுவலகம் மற்றும் இல்லமும் கட்டப்பட்டது. நீண்டு வளர்ந்த தாடிவைத்து, எளிமையான காவி நிற அங்கியில், கையில் ஊன்றுகோலோடு இருப்பார்கள்.

Rev. J. S. ஆனந்த் ஆசீர் ஐயர்வர்கள் காலத்தில் தான் திருநெல்வேலி திருமண்டல சிறுவர் ஊழியம் (Tirunelveli Diocesan Children's Mission)  என்று பெயரிடப்பட்டது.  21.06.1981 அன்று பாலியர் சங்கத்தோடு இணைந்து செயலாற்ற திருநெல்வேலி திருமண்டில கிறிஸ்தவ கல்விதுறை (TDCED) என்னும் பிரிவு ஏற்படுத்தப்பட்டது.

1991 ஆம் ஆண்டு நூற்றாண்டு விழா கண்ட பாலியர் சங்கம் வாயிலாக, அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பாலியர் நேசன் ஆங்கிலப் பத்திரிக்கை வெளியிடப்பட்டது. பின்னர் பேரின்ப கீதம் என்ற பாடல் புத்தகம் வெளியிடப்பட்டது.

தற்போது நடைபெறும் ஊழியங்கள்

ஞாயிறு பாடசாலையானது மொத்தம் சுமார் 129 சேகரங்களில் 438 ஆலயங்களில் நடைபெறுகிறது. சபைமன்ற நல்மேய்ப்பர் சிறுவர் முகாம் 8 இடங்களில் வருடம் ஒரு முறை ஆறு சபைமன்ற அளவில் நடைபெறுகிறது. வருடந்தோறும் குற்றால முகாம் ஜூலை மாதத்தில் நடைெறுகிறது. திருமண்டில கல்வி நிறுவங்களிலும் விடுதிகளிலும் சிறப்பு கூடுகைகள் நடத்தப்படுகின்றன. சேகர அளவில், சபைமன்ற அளவில் அடுத்து திருமண்டில அளவில் பிள்ளைகளுக்கு இடையே தாலந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. www.tdcm.in என்ற வலைத்தளம், Youtube மற்றும் WhatsApp வாயிலாக சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

Council Camp

நாம் நம்முடைய பிள்ளைகளை ஒழுங்காக சண்டே ஸ்கூலுக்கு அனுப்புகிறோமா?


தொடர்புகொள்ள வேண்டிய முகவரி
Director
Baaliar Sangam
CSI Bishopstowe Compound
Palayankottai – 627 002

துணை நின்ற நூல்கள்

ஊரும் பேரும் - ஆர். எஸ். ஜேக்கப்
திருமண்டில பஞ்சாங்கம்

Post a Comment

2 Comments