Ad Code

ஏற்றுக்கொள்ள அழைப்பு • A Call to Accept • ரோமர் 15:7 Romans

1. ஞாயிறு குறிப்புகள் 
ஞாயிறு:  கிறி. உயி. திரு. முன்வரும் 4-ம் ஞாயிறு
தேதி: 08/03/2026
வண்ணம்: கருநீல நிறம் 
திருமறைப் பாடங்கள்:
பழைய ஏற்பாடு: ஏசாயா 65:1-8
நிருப வாக்கியம்: ரோமர் 15:1-13
நற்செய்தி பகுதி: லூக்கா 19 :1 - 10 
சங்கீதம்: 86

2. திருவசனம்
தலைப்பு: ஏற்றுக்கொள்ள அழைப்பு 
திருவசனம்: ரோமர் 15:7
 (பவர் திருப்புதல்) ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். 

   (திருவிவிலியம்) ஆகையால், கிறிஸ்து உங்களை ஏற்றுக் கொண்டது போல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள். என் கருத்து இதுவே. 
                    
3. திருவசனத் தலைப்பு & ஞாயிறு தொடர்பு
திருநெல்வேலி திருமண்டல சட்டவாக்கியம்.

4.வசன குறிப்புகள்
நூலாசிரியர்: இந்நிருபத்தை எழுதினவர் அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் ஆவார் (1:1,2). பவுல் அப்போஸ்தலன் சொல்ல சொல்ல தெர்தியு என்பவர் இந்நிருபத்தை எழுதினார் (18:22).

அவையோர்: அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் ரோம திருச்சபையை நிறுவவில்லை. பெந்தகோஸ்தே நாளில் பேதுருவின் பிரசங்கத்தை கேட்டு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட யூதர்கள் மற்றும் பிற சமயத்தில் இருந்து யூத மதத்தை ஏற்றுக் கொண்டவர்கள் ரோம பட்டணத்திற்கு வந்து திருச்சபை உருவாக்கியிருக்கலாம் அல்லது பவுல் அப்போஸ்தலன் மூலம் இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள் ரோமில் வந்து குடியேறின போது அங்கு திருச்சபையை ஏற்படுத்தியிருக்கலாம் என்கிற கருத்தும் உண்டு. 
 ரோம திருச்சபையில் யூத கிறிஸ்தவர்களும் பிற இனத்தை சார்ந்த கிறிஸ்தவர்களும் கலந்திருந்தனர். 

எழுதப்பட்ட காலம்: சுமார் கிபி 57 இல் கொரிந்து பட்டணத்திலிருந்து எருசலேமுக்கு போக பவுல் அப்போஸ்தலன் ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கும் போது இந்நிருபம் எழுதப்பட்டது.
 
 5. திருவசன விளக்கவுரை 
 ரோம திருச்சபையில் உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் விசேஷித்த நாட்களை குறித்ததான வேறுபட்ட கருத்துக்கள் அவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தியிருந்தது. அது மட்டுமல்ல யூதர்கள் மற்றும் பிற இனத்தவர்கள் என்கிற கருத்து வேறுபாடும் காணப்பட்டது. யூதர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களாகவும் (Weak) அதே நேரத்தில் பிற இனத்தவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்களாகவும் (Strong) இருந்தார்கள். 

யூதர்கள் தங்களுடைய நியாயப்பிரமாணத்தின் படி உணவு பழக்க வழக்கு முறைகள் மற்றும் விசேஷித்த நாட்களே ஆசரிக்க வேண்டும் என்று கருதினார்கள் ஆனால் பிற இனத்தவர்கள் கிறிஸ்துவுக்குள்ளாக எல்லா நாட்களும் எல்லா உணவுகளும் ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதாகும் தீட்டாக கருதக்கூடாது என்று வலியுறுத்தினார்கள். இந்த காரியம் அவர்கள் மத்தியில் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியது. 

எனவே பவுல் அப்போஸ்தலன் ரோமர் 15:7 ல் இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தினுடைய மிக முக்கிய பகுதியான இயேசு கிறிஸ்து எல்லோரையும் ( வலிமையுடையவர், வலிமையற்றவர், யூதர் மற்றும் பிற இனத்தவர் ) ஏற்றுக்கொண்டதை குறிப்பிடுகிறார். அதை போல் நமக்குள் பல காரியங்களை குறித்ததான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஆண்டவருடைய நாம மகிமைக்காக இயேசு கிறிஸ்து நம்மை எப்படி ஏற்றுக் கொண்டாரோ நாமும் மற்றவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பவுல் அப்போஸ்தலன் வலியுறுத்துகிறார். ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்வது தான், கடவுளை மகிமைப்படுத்தும் செயல் என்பதை கற்றுக் கொடுக்கிறார்.

6. இறையியல் & வாழ்வியல்
நாம் வாழும் இந்த நவீன உலகில் கூட ஏழை-பணக்காரர் (பொருளாதார வருவாய் வேறுபாடு), உயர்ந்த சாதி-தாழ்ந்த சாதி, வேலைவாய்ப்பில் ஏற்றத்தாழ்வு, கல்வி மற்றும் சுகாதார வசதிகளில் உள்ள வேறுபாடுகள், மற்றும் உணர்ச்சி ரீதியான (மகிழ்ச்சி-துன்பம்) மாறுபாடுகள் போன்ற முக்கிய ஏற்றத் தாழ்வுகளாகக் கருதப்படுகின்றன. இந்தச் சூழலில் நாம் கிறிஸ்துவின் அன்பை எப்படிப் பிரதிபலிக்கிறோம்? 

7. அருளுரை குறிப்புகள்
1. இனங்களைக் கடந்த ஏற்றுக்கொள்ளுதல் (ரோம 15. 8 & 9)
2. எல்லைகளைக் கடந்த ஏற்றுக்கொள்ளுதல் (ரோம 15. 09)
3. சமூகக் கோட்பாடுகளை கடந்த ஏற்றுக்கொள்ளுதல் (ரோம 15.1)

(இயேசுவின் ஊழிய மாதிரி & புனிதர் பவுல் அடிகளார் ஊழிய மாதிரி சம்பவங்களை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.)

எழுதியவர்:
திரு. T. ரெபின் ஆஸ்டின்
சபை ஊழியர், கல்லிடைக்குறிஞ்சி

Post a Comment

0 Comments