Ad Code

ஆராதனை: இறைவனின் சந்நிதியில் இறைசித்தத்தை அறிதல் சங்கீதம் 27:4 Psalm

திருவசன தியானம் 2026

1. ஞாயிறு குறிப்புகள் 
ஞாயிறு:  திரித்துவ திருநாள் பின்வரும் 3 ஆம் ஞாயிறு
தேதி: 21/06/2026
வண்ணம்: பச்சை
திருமறைப் பாடங்கள்:
பழைய ஏற்பாடு: ஏசாயா 6:1-8
நிருப வாக்கியம்:அப்போஸ்தலர் 2:42-47
நற்செய்தி பகுதி: மாற்கு 12:28-34
சங்கீதம்: 27

2. திருவசனம்

தலைப்பு: ஆராதனை: இறைவனின் சந்நிதியில் இறைசித்தத்தை அறிதல்
இருப்பிடம்: சங்கீதம் 27:4
திருவசனம்:
(பவர் திருப்புதல்) கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன், நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன். 

(திருவிவிலியம்) நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். 


3. திருவசனத் தலைப்பு & ஞாயிறு தொடர்பு
லெக்சனரி (Lectionary) வழங்கியுள்ள அன்றைய நாளின் மையப் பொருள் படி, இது ஆராதனை ஞாயிறு

4. வசன குறிப்புகள்
நூலாசிரியர்:
தாவீது

அவையோர்:
இஸ்ரயேல் மக்கள்

வசன பின்னணி:
இந்த சங்கீதம் தாவீதின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு பெரும் நெருக்கடியின் போது எழுதப்பட்டது என்பதை அதன் வரிகள் ("பகைஞர்கள்", "பாளையமிறங்குதல்", "யுத்தம்") நமக்குக் காட்டுகின்றன. தாவீது தன் எதிரிகளால் (சவுல் அரசன் அல்லது அவனது மகன் அப்சலோம் மூலமாக) உயிருக்கு ஆபத்தான நெருக்கடிகளைச் சந்தித்தபோது எழுதப்பட்டது.

 5. திருவசன விளக்கவுரை
வசனங்கள் 1-6: தேவனைப் பற்றிய அசாத்திய தைரியம் மற்றும் ஆலயத்தின் மீதான வாஞ்சை.

தாவீதின் ஒரே வாஞ்சை: “கர்த்தருடைய ஆலயத்தில் தங்கி, அவருடைய மகிமையைப் பார்த்து, ஆராய்ச்சி செய்ய வேண்டும்.”
இங்கே “ஆராய்ச்சி” என்பது தேவனுடைய மனதை அறிதல், அவரது சித்தத்தைத் தேடுதல்.

தாவீது கடவுளின் சந்நிதி ஒரு மகிமையை பார்க்க கூடிய ஒரு இடம் என்கிறார். தாவீது அரசனாக இருந்தாலும், போர்வீரனாக இருந்தாலும், தேவனுடைய சந்நிதியை முதன்மையாக நாடினார்.
 
6. இறையியல் & வாழ்வியல்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
மனித வாழ்க்கையின் மிகப்பெரிய கேள்வி: “இறைவனின் சித்தம் என்ன?” என்பதாகும். பலர் தேவனுடைய சித்தத்தை அறிய விரும்புகிறார்கள். ஆனால் தாவீது கூறுவது என்னவென்றால், தேவனுடைய சந்நிதியில் தங்குகிறவர்களே இறைசித்தத்தை தெளிவாக அறிய முடியும் என்று!

இன்றைய அவசர உலகில் நாம் பல காரியங்களைத் தேடுகிறோம்; ஆனால் தேவனுடைய சந்நிதியைத் தேடுகிறோமா? என்பது பெரிய கேள்வி தான்?

7. அருளுரை குறிப்புகள்
A. ஒரே நோக்கம் (Singular Focus)
B. உன்னத தரிசனம் (Spiritual Vision)
C. உறைவிட தியானம் (Continuous Seeking)

எழுதியவர்
சகோ. கோயில்பிள்ளை
இறையியல் மாணவர்


Post a Comment

0 Comments