Ad Code

ஏரோது அந்திப்பா • Herod Antipas Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 21
ஏரோது அந்திபா: உணர்ந்தும் தவறான வாழ்வா?

1. பெயர்: ஏரோது அந்திப்பா • Herod Antipas
2. அர்த்தம்: 
தகப்பனின் சாயல் அல்லது தந்தைக்கு நிகரானவன் (Like his father / Against all).

3. சிறுகுறிப்பு: 
• கலிலேயா மற்றும் பெரேயா நாட்டின் பங்குவீத அதிபதி (Tetrarch).
• தன் சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளை அக்கிரமமாய் மணம் முடித்ததைத் தட்டிக்கேட்ட யோவான் ஸ்நானகனைச் சிறையிலடைத்து, தலையை வெட்டிக் கொன்றார்.
• இயேசு கிறிஸ்து இவரை "அந்த நரி" என்று வர்ணித்தார்.
• பிலாத்து இயேசுவை இவரிடம் அனுப்பியபோது, அவரிடமிருந்து அற்புதத்தைக் காண விரும்பினார். ஆனால் இயேசு மௌனமாக இருந்ததால், அவரைப் பரியாசம் செய்து திருப்பி அனுப்பினார்.

4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
ஏரோது யோவானின் போதனைகளைக் கேட்டும், தன் பாவ வழியையும் இச்சையையும் விடவில்லை. மனிதப் புகழுக்காகவும் கௌரவத்திற்காகவும் ஒரு தீர்க்கதரிசியைக் கொலை செய்யத் துணிந்தார். ஏரோதுக்குத் தன் தவறு எது, உண்மை எது என்று தெரிந்திருந்தது. ஆனால், தன் இச்சை, உலகப் பெருமை, மற்றும் மனிதர்களுக்குப் பயப்படும் குணம் ஆகியவற்றின் காரணமாக அவர் உண்மையை ஏற்றுக்கொள்ளவில்லை.

5. வேதாகம பகுதி (வாசிக்க): 
மத்தேயு 14: 1-12 (யோவான் ஸ்நானகன் கொலை செய்யப்படுதல்)
லூக்கா 13: 31-32 (இயேசு இவரை 'நரி' எனக் குறிப்பிடுதல்)
லூக்கா 23: 6-12 (இயேசுவை விசாரித்து பரியாசம் செய்தல்)

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

Post a Comment

0 Comments