Ad Code

Easter Thoughts 2026

ஏளனத்தைப் தகர்த்துப் போட்டு 
ஏதேனின் தீர்ப்பையும் புரட்டி
இறைநீதி நிலைநிறுத்தப்பட்டது
இயேசுகிறித்துவின் உயிர்ப்பால்

உயிர்த்த இயேசு 
தம்மைக் கொன்றோரைப் 
பழிவாங்கிட தேடவில்லை
மாறாக, 
அனைவருக்கும் அன்பைத்தான்
அவர் வெளிப்படுத்தினார்.

உனக்கு முன்னிருக்கும்
எவ்வளவு பெரிய கல்லும்
உயிர்த்த இயேசுகிறித்துவே
எளிதில் புரட்டுவார் என்பதற்குக்
கல்லறையின் கல்லே சாட்சி.

மரணம் குறித்தப் பயமா?
மரணத்தை வென்றவர்
உன்னோடு உண்டு
உறுதியாய் பிடித்திடு 

எவ்வளவு பெரிய கல் 
எத்தனை காவலர்கள்
எத்திசையும் பாதுகாப்பு
ஆனாலும்,
இயேசுவின் உயிர்ப்பை
இங்கு தடுக்கமுடியவில்லை
இவரே முதற்பலனானார்


மேயேகோ 
9486810915

Post a Comment

0 Comments