Ad Code

ஞாயிறு பாடசாலை ஊழியர்கள் செய்யக் கூடாதவை • Don'ts for Sunday School Workers


ஞாயிறு பாடசாலை ஊழியர்கள் தவிர்க்க வேண்டிய 10 முக்கிய காரியங்கள்

1. தயாரிப்பு இல்லாமல் வருவது: பாடத்தை முன்கூட்டியே படித்து ஆயத்தமாகாமல் வகுப்பிற்கு வரக்கூடாது. வகுப்பிற்காகவும், பிள்ளைகளுக்காகவும் தனிப்பட்ட முறையில் பிரார்த்தனை செய்ய மறக்கக்கூடாது.
2. பாரபட்சம் காட்டுவது: ஒருசில பிள்ளைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து, மற்றவர்களைப் புறக்கணிக்கக் கூடாது.
3. அலுவலக அணுகுமுறை: Sir, Madam, Miss என அழைக்க கட்டாயப்படுத்தக் கூடாது. அண்ணன், அக்கா / அம்மா என உறவின் நம்பிக்கையான அணுகுமுறை வேண்டும்.
4. நீண்ட நேரம் பேசுவது: பெரியவர்களுக்குப் பிரசங்கம் செய்வது போல நீண்ட நேரம் பேசாமல், எளிய கதைகள் மூலம் நடத்த வேண்டும்.
5. அதீத கற்பனை: வேதாகம சம்பவங்கள் அதீத கற்பனையில் திரிக்கப்படக்டாது. சரியாக சொல்லிக் கொடுக்க வேண்டும்.
6. மனதைக் காயப்படுத்துவது: பிள்ளைகளை மற்றவர்கள் முன்னிலையில் ஒப்பிட்டுப் பேசுவதோ, அவமானப்படுத்துவதோ கூடாது.
 7. சொல் வேறு, செயல் வேறு: தாங்கள் போதிக்கும் நற்பண்புகளின்படி ஆசிரியர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் வாழாமல் இருக்கக்கூடாது. உதாரணமாக, தாமதமாக வந்து தவறான முன்மாதிரியாக இருக்கக்கூடாது.
 8. கேள்விகளை அலட்சியப்படுத்துவது: பிள்ளைகளின் சந்தேகங்களைக் கேலி செய்யாமல், அன்போடு விளக்க வேண்டும்.
 9. கட்டுப்பாடற்ற வகுப்பறை: பிள்ளைகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று வகுப்பறை ஒழுக்கத்தை விட்டுவிடக்கூடாது.
10. நிர்வாக ஒழுங்கு: ஆயர் & சபை ஊழியர் அனுமதி இன்றி எதுவும் முடிவு எடுக்கக் கூடாது. 

Post a Comment

0 Comments