Ad Code

கானானியாகிய சீமோன் (சீடர்) Simon the Cananaite Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 17
சீமோன்: கிறித்துவுக்கான வைராக்கியம்

1. பெயர்: கானானியாகிய சீமோன் (சீடர்) Simon the Cananaite 
2. அர்த்தம்: கேட்டல் அல்லது செவிமடுத்தல் (Hearing / He who hears).

3. சிறுகுறிப்பு: 
• கானானியனாகிய என்பது 'கானா' ஊரைச் சேர்ந்தவர் என்ற அர்த்தமல்ல. எபிரேய மொழியில் 'கானா' (Qana) என்ற சொல்லுக்கு "உடன்பிரந்த வைராக்கியம் உள்ளவன்" என்று பொருள். 
• லூக்கா நற்செய்தியில் இவர் "செலோத்தே" (Zealot - வைராக்கியவான்) என்று அழைக்கப்படுகிறார்.
• சீடராவதற்கு முன்பாக இவர் யூதர்களின் சுதந்திரத்திற்காக ரோம அரசுக்கு எதிராக தீவிரமாக போராடிய "செலோத்துகள்" (Zealots) என்ற தீவிரவாத/தேசியவாத இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
• வேதாகமத்தில் இவரைப் பற்றிய தனிப்பட்ட வரலாற்றுப் பதிவுகள் மிகக் குறைவு என்றாலும், இறுதிவரை விசுவாசத்தோடு சுவிசேஷப் பணியாற்றினார். 
• பாரம்பரியத்தின்படி, இவர் பாரசீகம் அல்லது ஆப்பிரிக்க பகுதிகளில் நற்செய்தி அறிவித்து தியாக மரணமடைந்தார் என்று கூறப்படுகிறது.


4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
சீமோன் உலகப்பிரகாரமான, அரசியல் ரீதியான வைராக்கியம் கொண்டவராக இருந்தார். ஆனால் இயேசுவைச் சந்தித்தபின், அவருடைய வைராக்கியம் இறை அரசை அமைக்கும் தெய்வீக வைராக்கியமாக மாறியது. நம்மிடம் உள்ள உலகாசை, கோபம் மற்றும் தீவிர குணங்களை கடவுளுக்காக அர்ப்பணிக்கும்போது, அவை நற்கிரியைகளாக மாறும் என்பதை இவரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.

5. வேதாகம பகுதி (வாசிக்க): 
மத்தேயு 10:4
மாற்கு 3:18
லூக்கா 6:15
அப்போஸ்தலர் 1:13

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

Post a Comment

0 Comments