திருமறையில் யார் இவர் யாரோ? - 25
இலாசரு: இயேசுவின் நண்பர்

1. பெயர்: இலாசரு Lasarus 

2. அர்த்தம்: "இறைவனால் உதவப்பட்டவர்" (Elazar என்ற எபிரெய பெயரின் கிரேக்க வடிவம்).

3. சிறுகுறிப்பு: 
• பெத்தானியா ஊரைச் சேர்ந்த மார்த்தாள், மரியாளின் சகோதரர்.
• இயேசுவின் மிக நெருங்கிய, அன்பிற்குரிய நண்பராக வேதாகமத்தில் சித்திரிக்கப்படுகிறார்.
• இவர் கடுமையான நோயுற்று மரணமடைந்து, நான்கு நாட்களான பின்பு இயேசு உயிரோடு எழுப்பினார்.

4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
புதிய ஏற்பாட்டில் இயேசுவின் சீடர்களைத் தாண்டி, இயேசுவின் "நண்பன்" (Friend) என்று தனிப்பட்ட முறையில் பெயரிட்டு அழைக்கப்பட்ட ஒரே நபர் இலாசரு மட்டும்தான்.
யோவான் 11:11-ல் இயேசு சீடர்களை நோக்கி, "நம்முடைய சிநேகிதனாகிய (நண்பனாகிய) இலாசரு நித்திரையடைந்திருக்கிறான்" என்று மிகவும் உரிமையோடு குறிப்பிடுகிறார். வேதாகமத்திலேயே மிகச் சிறிய வசனமான "இயேசு கண்ணீர் விட்டார்" (யோவான் 11:35) என்பது இலாசருவின் மரணத்தின்போதுதான் நிகழ்ந்தது. இதைப் பார்த்த சுற்றியிருந்த யூதர்கள், "பார், இவர் அவனை எவ்வளவு அன்பாய்ச் நேசித்தார்!" என்றார்கள். ஒரு தனிமனிதரை "என் நண்பர்" என்று இயேசு அடையாளப்படுத்தியது இலாசருவை மட்டும்தான்.

5. வேதாகம பகுதி (வாசிக்க): 
யோவான் 11: 1 - 45 (இலாசரு உயிரோடு எழுப்பப்படுதல்)
யோவான் 12: 1 - 11 (இயேசுவோடு இலாசரு பந்தியில் அமர்ந்திருத்தல்)

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.