திருமறையில் யார் இவர் யாரோ? - 24
யவீரு: தளராத நம்பிக்கை
1. பெயர்: யவீரு Jairus
2. அர்த்தம்:
"அவர் பிரகாசிக்கச் செய்கிறார்" அல்லது "அவர் அறிவொளி ஊட்டுகிறார்" (He shines / Whom God enlightens).
3. சிறுகுறிப்பு:
• யவீரு கலிலேயா கடலோரப் பகுதியில் இருந்த ஒரு ஜெப ஆலயத்தின் தலைவராக இருந்தார்.
• இவர் ஒரு குரு (Priest) அல்ல, ஆனால் ஆலயத்தின் நிர்வாகப் பொறுப்பாளர்.
• யூத சமுதாயத்தில் மிகுந்த மதிப்பும் அந்தஸ்தும் கொண்டவர்.
• இவருடைய ஒரே மகள் (சுமார் 12 வயது) மரண அவஸ்தையாயிருந்தபோது, தனது அந்தஸ்தைப் பாராமல் இயேசுவின் பாதத்தில் விழுந்து, தன் வீட்டிற்கு வந்து அவளைக் குணமாக்கும்படி கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.
4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
யவீருவின் மகள் இறந்துவிட்டாள் என்ற செய்தி வந்தபோது, இயேசு அவரிடம்: "பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் பிழைப்பாள்" என்றார். சுற்றிலும் இருந்தவர்கள் அழுது, அவிசுவாசத்தோடு பரியாசம் செய்தபோதும், யவீரு இயேசுவின் மேல் வைத்த நம்பிக்கையைத் தளரவிடவில்லை. எல்லாமே முடிந்துவிட்டது என்று உலகம் சொல்லும்போதும், தளராத நம்பிக்கையோடு இயேசுவை நோக்கிக் காத்திருந்தால் அற்புதம் நடக்கும்.
5. வேதாகம பகுதி (வாசிக்க):
லூக்கா 8: 41-42, 49-56
மாற்கு 5: 21-24, 35-43
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

0 Comments