திருமறையில் யார் இவர் யாரோ? - 41
யூதா: உணர்த்தி எழுதுவோம்

1. பெயர்: 
யூதா (கடிதம் எழுதியவர்) Jude (Judas)

2. அர்த்தம்: 
துதிக்கப்பட்டவன்

3. சிறுகுறிப்பு: 
• இவர் இயேசு கிறிஸ்துவின் தம்பியாகவும் (மத்தேயு 13:55), யாக்கோபின் சகோதரராகவும் அறியப்படுகிறார்.
• ஆரம்பத்தில் இயேசுவின் ஊழியத்தை எதிர்த்தவர், இயேசுவின் உயிர்ப்புக்கு பின், மன மாற்றம் அடைந்தார்.
• எனினும், தன் கடிதத்தில் தன்னை "இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரன்" என்றே தாழ்மையோடு அறிமுகப்படுத்துகிறார்.
• புதிய ஏற்பாட்டின் மிகச்சிறிய புத்தகங்களில் ஒன்றான 'யூதா எழுதின நிருபம்' ஒரே ஒரு அதிகாரத்தை மட்டுமே கொண்டது.

4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
யூதா தன் கடிதம் வழியாக விசுவாசிகளுக்கு மிகவும் அழுத்தமாக உணர்த்தி (Earnest Contending for the Faith) எழுதினார். சமுதாயத்திலும் சபையிலும் மெதுவாய் நுழைந்து, தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்திற்கு ஏதுவாக மாற்றி, சத்தியத்தைத் புரட்டுகிற கள்ளப் போதகர்களைக் குறித்து யூதா மிகவும் பாரத்தோடு உணர்த்தி எழுதினார்.

5. வேதாகம பகுதி (வாசிக்க): 
மத்தேயு 13:55
யூதா நிருபம்

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.