ஜூலை 11, 1987 அன்று உலக மக்கள்தொகை 500 கோடியை (5 Billion) கடந்தது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், 1989 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் (UNDP) ஆலோசனையின் பேரில் இந்த நாள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இது உலகளாவிய மக்கள்தொகை வளர்ச்சி, பாலின சமத்துவம், வறுமை, மற்றும் குடும்பக் கட்டுப்பாடு போன்ற முக்கியமான பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் (United Nations) கொண்டுவரப்பட்ட ஒரு தினமாகும்.
2026 இல் தற்போது உலக மக்கள்தொகை 833 கோடியை (8.3 பில்லியன்) தாண்டியுள்ளது. மக்கள் தொகையில் உலகிலேயே இந்தியா முதலிடத்திலும், சீனா இரண்டாமிடத்திலும் உள்ளன.

0 Comments