Ad Code

கற்றுக்கொள்ளும் திருச்சபை நெகேமியா 8:8 Theological Education Sunday

திருவசன தியானம் 2026

1. ஞாயிறு குறிப்புகள் 
ஞாயிறு:  பெந்.திரு. பின்வரும்  7 -ம் ஞாயிறு (திருத்துவ-6)
தேதி: 12/07/2026
வண்ணம்: பச்சை 
திருமறைப் பாடங்கள்:
பழைய ஏற்பாடு: நெகேமியா 8:1-12
நிருப வாக்கியம்: 1 கொரி. 14:20-23
நற்செய்தி பகுதி: மத்தேயு. 13:16-23
சங்கீதம்: 1

2. திருவசனம்
தலைப்பு: கற்றுக்கொள்ளும் திருச்சபை 
இருப்பிடம்: நெகேமியா 8:8
திருவசனம்:
(பவர் திருப்புதல்) அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தைத் தீர்க்கமாக வாசித்து அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள். 
(திருவிவிலியம்) மக்களுக்குப் புரியும்படி தெளிவாகவும், பொருளோடும் கடவுளின் திருச்சட்டத்தை உரக்க வாசித்தார்கள். ஆதலால் மக்களும் வாசிக்கப்பட்டதன் பொருளைப் புரிந்து கொண்டனர்.

3. ஞாயிறு தொடர்பு
இறையியல் கல்வி ஞாயிறு 

4. வசன குறிப்புகள்
நூலாசிரியர் &அவையோர்:
 நெகேமியா புத்தகத்தை இயற்றியவர் நெகேமியா ஆவார். ஆய்வாளர் என்கிற முறையில் எஸ்ராவும் நெகேமியாவுடன் இணைந்து இந்த ஆக்கத்தில் ஈடுபட்டிருக்கலாம்.  

பாபிலோனிய சிறைவாசத்திற்கு பின்பு எருசலேமிற்கு மூன்றாவது கட்டமாக நெகமியாவின் தலைமையில் திரும்பி வந்த யூத மக்களை இடிந்து கிடந்த எருசலேமின் அலங்கத்தை கட்டுமாறு நெகேமியா தைரியப்படுத்துகிறார்.  

எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை 
இந்நூல் எழுதப்பட்ட காலம் கி.மு 445- 432. 

வசன பின்னணி:
பெர்சியா மன்னனின் ஆட்சிக்காலத்தில் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து வந்த யூதர்கள் எருசலேம் தேவாலயத்தை கட்டினார்கள் அதற்குப் பிற்பாடு நெகேமியா இடிந்து போன எருசலேமின் அலங்கங்களை கட்டினார்கள். அதே நேரத்தில் தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை பாபிலோன் சிறையிருப்பில் இழந்து போன யூதர்களை மீண்டும் கட்டும்படியாக நியாயப்பிரமாண புத்தகத்தை வாசித்து விளக்கி காண்பிக்கிறார். அதன் மூலம் மக்கள் மீண்டும் உயிர் மீட்சி அடைகிறார்கள்.

5. திருவசன விளக்கம் 
 யூதர்கள் பாபிலோன் அடிமைத்தனத்தில் இருந்த காலகட்டத்தில் அராமிக் மொழி நாடுகளுக்கிடையே (international
diplomatic language ) இணைப்பை ஏற்படுத்தும் மொழியாக இருந்தது. எனவே யூதர்கள் அராமிக் மொழியை தங்களுடைய சொந்த மொழியான எபிரேயத்தோடு இணைத்து பேசினர். இதனால் பழைய ஏற்பாடு அராமிக் மொழியில் பெயர்புரை (Targums- Aramai paraphrases of the Old Testament) செய்யப்பட்டது.

எனவே, நெகேமியா மக்களுக்கு புரியும் வண்ணமாக நியாயப்பிரமாண புத்தகத்தை சொந்த மொழியில் விளக்கி (make it clear or Translation or interpretation) காண்பிக்கிறார். இதன்மூலம் மக்கள் நியாயப்பிரமாணத்தின் முழு செய்தியையும் எளிமையாக விளங்கிக் கொண்டார்கள். மக்கள் நியாயப்பிரமாணத்தை கற்றுக் கொண்டதால் ஆவிக்குரிய வாழ்க்கையில் உயிர் மீட்சி அடைந்தார்கள்.
    
6. இறையியல் & வாழ்வியல்
 ஆண்டவருடைய வார்த்தை அடங்கிய வேத புத்தகம் மக்களுடைய சொந்த மொழியில் விளக்கி காண்பிக்கப்படும் போது மக்கள் அதை எளிதாக கற்று கொண்டு ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ச்சிடைகிறார்கள். மூல மொழியான எபிரேயம் மற்றும் கிரேக்கத்தில் எழுதப்பட்டுள்ள வேதாகமத்தை நம்முடைய தாய் மொழியில் (தமிழ்) மக்கள் கற்றுக் கொள்ளும் படியாக விளக்கி காண்பிப்பதற்கு துணை நூல்களை ( புதிய மொழிபெயர்ப்பு வேதாகமங்கள், விளக்க உரைகள், ஒத்திசை வேதாகம், கலைக்களஞ்சியம், அகராதிகள் etc) கட்டாயம் பயன்படுத்த வேண்டும். இப்படி பயன்படுத்தும் போது தான் மூல மொழிகளுக்கு நிலையான சரியான அர்த்தத்தை அறிந்து கொள்ள முடியும். 200 ஆண்டுகளுக்கு மேலாக கிறிஸ்தவத்தில் கோலோச்சி கொண்டிருக்கிற பவர் (ஹென்றி பவர் ) திருப்புதல் வேதாகமத்தை மட்டும் நாம் பயன்படுத்தும் போது மூல மொழிக்கு ஒத்த வேதவசன விளக்கங்களை எல்லா வசனங்களுக்கும் சரியாக பெற்றுக் கொள்ள முடியாது. எனவே, மூல மொழிகளுக்கு நெருங்கிய அர்த்தத்தை (Message and content of the Scripture does not change) கொடுக்கக்கூடிய திருத்தப்பட்ட வேதாகம பதிப்புகளை (revised version) பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்துவதன் மூலம் ஆண்டவருடைய வார்த்தையின் உண்மையான மற்றும் ஆழமான அர்த்தத்தை திருச்சபை கற்றுக் கொள்ள முடியும். 

7. அருளுரை குறிப்புகள்

எழுதியவர்
தா. ரெபின் ஆஸ்டின்
சபை ஊழியர்.

Post a Comment

0 Comments