1. தலைப்பு
பார்வையற்ற இருவர் பார்வையடைதல்: பார்வையளிக்கும் இறைமைந்தர்
2. திருமறை பகுதி
மத்தேயு 9:27 - 31
3. இடம் & பின்னணி
பார்வையற்ற இருவரை இயேசு குணப்படுத்தியது மத்தேயு நற்செய்தியில் மட்டுமே வரும். மாற்கு நற்செய்தியாளர் பார்வையற்ற ஒரு நபர் என்று குறிப்பிட்டுள்ளார். மத்தேயு 9:27-31- ல் உள்ள நற்செய்தி விவரத்தின்படி , யவீருவின் மகளை சுகப்படுத்தி விட்டு, இயேசு தனது பயணத்தைத் தொடரதொடரும்போது, பார்வையற்ற இருவர் அவரைப் பின்தொடர்ந்ததாக உள்ளது.
4. விளக்கவுரை
இயேசுவை அவர்கள் பின்தொடர்ந்து, "தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும்!" அவர் வீட்டிற்குள் சென்றதும், பார்வையற்றவர்கள் அவரிடம் வந்து, "என்னால் இதைச் செய்ய முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?" அவர்கள், "ஆம், ஆண்டவரே" என்று பதிலளித்தார்கள். பின்னர் அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, "உங்கள் நம்பிக்கையின்படியே உங்களுக்கு ஆகட்டும்" சொன்னவுடன், பார்வை மீட்கப்படுகிறது. மேலும் அவர் இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கடுமையாக எச்சரித்தார்.
5. கருத்துரை
இயேசுவை, 'தாவீதின் மகன்' என்று குறிப்பிடுவதில், நற்செய்தியாளர் மத்தேயு தனி கவனம் செலுத்தியுள்ளார் என்பதை அறிவோம். தாவீதின் மகன் இயேசு கிறிஸ்து இந்த பார்வையற்ற நபர்களுக்கு விடுதலை அளித்தார். அதே நேரத்தில், முதலில் இயேசுவைக் குறித்த நம்பிக்கை அவர்கள் இருதயத்தில் வெளிச்சம் கொடுத்திருந்தது. ஆகவே தான், அவர்கள் தாவீதின் மகனே என்று உரிமையோடு அழைத்தனர். இயேசுவின் மீது அவர்கள் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. அவர்கள் விருப்பத்தை இயேசு நிறைவேற்றினார்.
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.
_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ்
(மேயேகோ)
0 Comments