கோல்கேட் பட்பசை (Paste) பற்றி தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. இதற்கு காரணம் ஆனவர் வில்லியம் கோல்கேட் (William Colgate). அந்தகாலத்தில் அமெரிக்கா தேசம் கண்டுபிடிக்க பட்ட பிறகு இவர் குடும்பம் ஐரோப்பா தேசத்தில் இருந்து அங்கு குடி ஏறியவர்கள். விவசாயம் தான் தொழில். ஏழ்மை யான நிலை. குடும்பத்தில் கடைசி மகன். தன் வாலிப வயதில் ஒரு நாள் மாலை நேரத்தில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்து தன் தாயாரை பார்த்து சாப்பிட எதாவது கொடு என்று கேட்டான். தாயார் மிகுந்த சோகத்துடன் எதுவும் இல்லை மகனே என்று சொல்ல.. பசியுடன் படுக்க சென்றான் வில்லியம் கோல்கேட்.. இதை பார்த்த அவன் தந்தை இரவு வெகு நேரம் யோசித்து விடிந்த உடன் வில்லியம் கோல்கேட் யை அழைத்து.. மகனே உன்னை பராமரிக்க என்னால் முடிய வில்லை. இந்தா என்று ஒரு பழைய பைபிள்லை எடுத்து கொடுத்து இது தான் உன் பெலன். எங்காவது சென்று பிழைத்து கொள் என்று அவனை வெளியே அனுப்பி விட்டார்.
பைபிள் லை கையில் வைத்து கொண்டு வில்லியம் பல இடங்களில் அலைந்து ஒரு சோப்பு (soap ) தயாரிக்கும் சிறிய பேக்டரி முன்பு நின்று வேலை கேட்டான். இவன் தோற்றதை பார்த்த முதலாளி அவன் இடம் இங்கு வேலை செய்பவர்கள் போன பிறகு தரையை கழுவி சுத்தம் செய்து விட்டு வாயில் அருகே இரவில் படுத்து கொள்ள அவனுக்கு வேலை கொடுத்தார். தினமும் வில்லியம் வேலையை சரியாக முடித்து தன் தந்தை கொடுத்த பைபிளை வாசித்து வாசலில் படுத்து கொள்வான். இதை பல நாட்கள் அந்த முதலாளி கவனித்து வந்தார். அவருக்கு குடும்பம் இல்லை..
ஒரு நாள் அந்த முதலாளி திடீர்னு இறந்து விட்டார். வேலை செய்த பலர் ஐயோ இவர் இப்படி இறந்து விடடாரே. இனி நமக்கு யார் வேலை கொடுப்பார் என்று கலங்கி நிற்க.. அந்த முதலாளி வக்கீல் வந்து வருத்தம் வேண்டாம் இந்த பேக்டரி யை தொடரந்து நடத்த ஒரு உண்மையான கிருஸ்தவ மகனை எனக்கு ஆண்டவர் கொடுத்து இருக்கிறார் அவன் வில்லியம் கோல்கேட் என்று உயில் எழுதி இருக்கிரார் என்று கூறி அந்த பேக்டரி சொத்தை வில்லியம் பெயற்கு மாற்றி கொடுத்தார். அதன் பிறகு வில்லியம் தன் சகோதரர்கள் உடன் அந்த பேக்டரி யை தொடறந்து நடத்தினார்.
தினமும் வேதம் வாசித்து ஜெபித்து அதன் பிறகு தான் வேலையை தொடருவார்.. தொழில் ஓரளவுக்கு லாபம் வர தான் அங்கம் வகித்த சர்ச் க்கு பத்தில் ஒரு பங்கை காணிக்கை ஆக ஆண்டவருக்கு கொடுத்தார்.. லாபம் அதிகாரிக்க பத்தில் இரண்டு பங்கை கொடுத்தார். கம்பெனி நல்ல நிலைக்கு வர காணிக்கையை மூன்று பங்காக்கி கொடுத்தார்.. கம்பெனி வேலை போக மற்ற நேரங்களில் ஜெபம் ஊழியம் என்று செலவு செய்தார். அவர் இறக்கும் போது தன் கம்பெனி லாபத்தில் பாதியை ஆண்டவர் ஊழியத்துக்கு கொடுத்தார்.
அவர் இறந்த பிறகு அவரது வாரிசுகள் சோப்பு கம்பனி யை பல் பசை கம்பெனி ஆக மாற்றி தேசத்தில் பல இடங்களில் விற்பனை.. பெருகி இன்று உலகம் முழுவதும் விற்கும் Multi National company ஆகி விட்டது. அவர்கள் தந்தை நினைவாக Colgate company இன்றும் தன் லாபத்தில் ஆண்டவர் ஊழியத்துக்கு கொடுக்கிறார்கள்.
0 Comments