Ad Code

பேசும்திறன் குன்றியோர் நலம் பெறுதல்: பேசும்திறனளிக்கும் இறைமைந்தர் Healing of a Man who was Unable to Speak

1. தலைப்பு
பேசும்திறன் குன்றியோர் நலம் பெறுதல்: பேசும்திறனளிக்கும் இறைமைந்தர்

2. திருமறை பகுதி
மத்தேயு 9:32 - 34

3. இடம் & பின்னணி
மத்தேயு நற்செய்தியாளர் மட்டுமே இந்த அற்புதத்தை பதிவு செய்துள்ளார். இது மத்தேயு 9 ஆம் அதிகாரத்தில் வரும் 5வது அற்புதமாகும். இயேசு யவீருவின் மகளை சுகப்படுத்தின பின்பு, இரு குருடர்களுக்கு பார்வை கொடுத்தார். அதன் பின்பு தான், இந்த பேசும் திறன் குன்றிய மனிதனை இயேசுவிடம் கொண்டு வந்தார்கள்.

4. விளக்கவுரை
பேய் பிடித்து ஊமையாகிவிட்ட ஒரு மனிதனை மக்கள் இயேசுவிடம் கூட்டிக்கொண்டு வந்தார்கள். இயேசு அந்தப் பேயை விரட்டியதும் அவன் பேச ஆரம்பித்தவுடன் மக்கள் எல்லாரும் அதைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டு, "இந்த மாதிரி ஒன்றை இஸ்ரவேலில் நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை” என்று சொன்னார்கள். ஆனால் பரிசேயர்கள், “பேய்களுடைய தலைவனின் உதவியால்தான் இவன் பேய்களை விரட்டுகிறான்” சொல்லி இயேசுவை ஏற்க மறுத்தார்கள். சொன்னார்கள்.

5. கருத்துரை
உலக மனிதர்கள் பேசும் திறனற்ற அவனை தான் ஒரு குறைப்பாடு உள்ளவனாக பார்த்திருப்பார்கள். ஆனால் இயேசுவை உள்ளான மறைபொருளைக் கண்டார். ஒரு மனிதனை பேச முடியாதபடிக்கு ஊமையாக்கி வைத்திருந்தது பேய். எனவே இயேசு முதலில் அந்தப் பேயை விரட்டினார். அவன் பேச ஆரம்பித்தான். பேசும்திறனளிக்கும் இறைமைந்தர் இயேசு கிறிஸ்து என்பதற்கு இது வரலாற்று சான்று. 
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.

_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ் 
        (மேயேகோ)



Post a Comment

0 Comments