Ad Code

திருப்பாடல் தியானம் 84 Psalm இறை வீட்டை நேசிப்போம்

மேயேகோ.இன் 1500வது பதிவு

திருப்பாடல் தியானம் 84
இறை வீட்டை நேசிப்போம் 

சங்கீதம் 84 என்பது கோராகின் புத்திரர்களால் எழுதப்பட்ட ஒரு "பயண திருப்பாடல்" ஆகும். கோராகின் மரணத்திற்கு பின்னர், அந்த வம்சத்தில் வந்த சாமுவேல் வாயிலாக, தாவீதின் ஆணைப்படி, இந்த வம்சம் மீண்டும் தேவாலய பணிவிடை செய்ய அனுமதிக்கப்பட்டகோராகின் புத்திரர்களால் எழுதப்பட்டது எனக் கருதப்படுகிறது. அல்லது பாபிலோனிய படையெடுப்பின் போது, ஆலயமற்று இருந்த நிலையில், இறை பிரசன்னத்திற்காக ஆழ்ந்த, தீவிரமான ஏக்கத்தை குறிப்பிட்டு அவர்கள் பாடியிருக்கலாம்.

சீயோனுக்குப் பயணம் செய்யும் பயணங்களின் மகிழ்ச்சியைக் கொண்டாடுவதாகவோ அல்லது ஆலயத்தில் வசிப்பதன் ஆசீர்வாதத்தைப் பற்றி சிந்திப்பதாகவோ இருக்கலாம். அப்படி பயணிக்கும் போது, எருசலேமில் உள்ள ஆலயத்தை அடைய, வறண்ட "பாகாவின் (அழுகையின்) பள்ளத்தாக்கு" வழியாகப் பயணிக்கும் சூழலில் இருப்பதாகக் (ஏறுதலின் சங்கீதம்) கருதப்படுகிறது.

ஆலய இசைக்கலைஞர்களாகவும் வாசற்படிகளைக் காப்பவர்களாகவும் இருந்த லேவியர்களின் குழுவான கோரகின் குமாரர் இந்த சங்கீதத்தில், கடவுளை "சேனைகளின் கர்த்தர்" என்று அடிக்கடி குறிப்பிட்டு, கர்த்தரை நம்பி அவருடைய ஆலயத்தில் வசிப்பவர்களின் "பேறுபெற்ற தன்மையை" உணர்த்தியுள்ளார்கள். ஆகவே நாமும் இறைவனின் வீட்டை நேசிப்போம், பயன்படுத்துவோம்.

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ 
 

Post a Comment

0 Comments