ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி இந்திய காவலர்கள் தினமாக (Indian Police Commemoration Day) ஆசரிக்கப்படுகிறது.
1959 ஆம் ஆண்டு இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் நிகழ்ந்த மோதலில், இந்திய எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்ட வந்த 10 போலீஸார் அக்டோபர் 21-ஆம் தேதி கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21 ஆம் தேதி தேசிய காவலர்கள் நினைவு தினம் கொண்டாடப்படுகிறது.
இதேபோன்று நாடு விடுதலை அடைந்ததில் இருந்து 2018 ஆகஸ்டு வரையில் 35,136 போலீசார் நாட்டை பாதுகாக்கும் பணி மற்றும் மக்களை காக்கும் பணியில் உயிர் தியாகம் செய்துள்ளனர்.
காவல் துறை பணியாளர்களின் தியாகம் மற்றும் வீரத்தை பாராட்டும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இரவு பகல் பாராமல் உயிரை பணயம் வைத்து காவல் பணியாற்றும், உண்மையான நேர்மையான நேசமிகுந்த காவலர்களை, வாழ்த்திப் பாராட்டுகிறோம். காவல்துறை நண்பர்கள் அனைவருக்கும் meyego.in சார்பாக இனிய காவலர் தின வாழ்த்துக்கள்
தேசிய காவலர் நினைவகத்தில் அமைந்துள்ள வீரச்சுவரின் ஒரு பகுதி.
0 Comments