1. குறிப்புகள்
புது வருடம்
தேதி: 01/01/2025
வண்ணம்: வெள்ளை
திருமறை பாடங்கள்:
ஏசாயா 58. 9 - 14 முன்.
எபேசியர் 2. 19 - 22
மத்தேயு 7. 24 - 29
சங்கீதம்: 65
2. திருவசனம் ஏசாயா 58:12 a
(பவர் திருப்புதல்) உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க்கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள், தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்,
(திருவிவிலியம்) உன் மக்கள் பண்டை நாளிலிருந்து பாழடைந்து கிடப்பவற்றைக் கட்டியெழுப்புவர்; தலைமுறை தலைமுறையாக உள்ள அடித்தளங்களின் மேல் கட்டியெழுப்புவாய்;
3. ஆசிரியர் & அவையோர்
பழைய ஏற்பாட்டின் பவுல் என்று அழைக்க கூடிய சிறப்பை பெற்றவர் ஏசாயா ஆவார். ஏசாயாவின் தகப்பன் யூத அரசனான யோவாசின் இளைய மகன் ஆமோத். ஏசாயா ஒரு சிறப்பான அரச குடும்பத்தில் பிறந்தவர் மற்றும் சிறந்த மொழி நடையும், இலக்கிய நடையும் பெற்றவர். இவரது மனைவி தீர்க்கதரிசினியாக இருந்தார், இவருக்கு இரண்டு குமாரர்கள் இருந்திருக்க வேண்டும் ( 7:3; 8:3).
எருசலேமில் தன்னுடைய தீர்க்கதரிசன ஊழியத்தை நிறைவேற்றினார். இவரது தீர்க்கதரிசனம் அரசனாகிய மனாசேக்கு எரிச்சலை ஏற்படுத்தினதால், மனாசே இவரை இரு தடிகளுக்கு நடுவே கட்டி வைத்து வாளினால் அறுத்து கொலை செய்ததாக யூத பாரம்பரியம் கூறுகிறது. எபி. 11:37 இதை குறிப்பாதாகவே இருக்க வேண்டும்.
யூதாவை தேவனிடம் திருப்புதல் மற்றும் மேசியா மூலம் வரும் இரட்சிப்பை எடுத்துரைத்தால். (ஏசாயாவுக்கு பின் 150 ஆண்டுகள் கழித்து கோரேசின் ஆணைப்படி சிறைவாசிகள் திரும்பிவந்து ஆலயத்தை காட்டுவார்கள் என்ற தீர்க்கதரிசனம் சிறப்பிற்குரியது).
4. எழுதப்பட்ட காலம்
ஏசாயாவின் தீர்க்கதரிசன ஊழியம் சுமார் கி. மு. 740 முதல் 681 வரை (1:1). 1-39 அதிகாரங்கள் கி. மு.700 மற்றும் 40-46 வரையிலான அதிகாரங்கள் கி. மு. 681-லும் எழுதப்பட்டதாக கருதலாம்.
இந்த புத்தகத்தை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.
1. First (Proto) Isaiah = 1-39
2. Second (Deutero)Isaiah=40-55
3. Third (Trito) Isaiah = 56-66
5. வசன விளக்கவுரை
ஏசாயா 58-ம் அதிகாரத்தில் பொய்யான சமய சடங்குகளையும், உண்மையான உபவாசத்தையும், அதனுடைய தன்மை மற்றும் நோக்கத்தையும் குறித்து ஆண்டவர் ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் எச்சரிக்கிறார். ஏனென்றால், கர்த்தருடைய ஜனங்கள் உண்மையாகவே ஆண்டவரை ஆராதிப்பதாக எண்ணினார்கள்; ஆனால், அதற்கேற்ற ஆசிர்வாதத்தை அவர்கள் தங்கள் வாழ்வில் பெற்றுக் கொள்ளவில்லை (v. 3). காரணம் அவர்களுடைய நீதியான நடத்தையின் (Justice ) மூலம் ஆண்டவரை பிரியப்படுத்தாமல் தங்களைத் தாங்களே பிரியப்படுத்திக் கொண்டார்கள் (v. 3).
கர்த்தருடைய ஜனங்கள் ஆண்டவருடைய விருப்பப்படி உபவாசத்தையும் மற்றும் பசியிலிருப்பவருக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி செய்தால் அவர்களை ஆசீர்வதிப்பேன் என்று ஆண்டவர் ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் வாக்கு கொடுக்கிறார்.
6.இறையியல் & வாழ்வியல்
ஆண்டவர் எருசலேம் மக்களின் வாழ்க்கையை மீண்டும் பழுது பார்த்து மீட்பதற்கு விரும்புகிறார். ஆனால் அவர்கள் தங்களுடைய மாய்மாலமான பக்தி மற்றும் உபவாசத்தை விட்டு விட்டு பசியிலிருப்பவருக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி செய்யும்போது மீண்டும் கட்டப்படுவார்கள் என்று ஆண்டவர் அவர்களுக்கு வாக்குத்தத்தம் கொடுக்கிறார். தேவையுள்ளவர்களுக்கு உதவி செய்வதே உண்மையான பக்தி அதையே ஆண்டவர் விரும்புகிறார், அவர்களை தான் ஆண்டவர் ஆசீர்வதிக்கிறார்.
7. அருளுரை குறிப்புகள்
சீராகும் ஆண்டு
1. சீர் அடைவோம் (Self Reformation)
2. சீர்ப்படுத்துவோம் (Social Reformation)
3. சீர்பெறுவோம் (Reformed Blessing)
Written by
Mr. Rebin Austin
Catechist, Kallidaikurichi Pastorate
0 Comments