பரிசுத்த வேதாகமம் பரிசுத்த ஆவியானவர் மூலமாய் வெளிப்படுத்தப்பட்டு, நடத்தப்பட்டு கி.மு.1500 முதல் கி.பி.100 வரை உள்ள 1600 வருடங்களில் ஏறக்குறைய 40 பரிசுத்தவான்களால் எழுதப்பட்டதாகும்(2 தீமோ 3:16).
வேதாகமம் மூன்று மொழிகளில் எழுதப்பட்டது – எபிரேயம், அரமிக், கிரேக்க மொழி.
“பைபிள்” என்கிற வார்த்தை “பிபிலியா” என்னும் கிரேக்க வார்த்தையிலிருந்து வந்ததாகும் இதன் பொருள் “புத்தகங்கள்”ஆகும்.
நம்முடைய வேதம் தான் உலகிலேயே அதிகமான மொழிகளிலே மொழிப்பெயர்க்கப்பட்ட புத்தகமாகும். மேலும் உலகிலேயே அதிகமாக விற்பனையாகும் புத்தகமாகும். உலகிலேயே அதிகமாக ஆராய்ச்சி செய்யப்படும் புத்தகம் வேதாகமம். உலகிலேயே அதிகமாக படிக்கப்படும் புத்தகமும் வேதாகமம்.
வேதம் கி.பி.1228-ம் ஆண்டு ஸ்டிபன் லாங்டன் என்பவரால் அதிகாரங்களாக பிரிக்கப்பட்டது. கி.பி.1448-ம் வருடம் ஆர்.நாதன் என்பவரால் பழைய ஏற்பாடு முழுவதும் வசனங்களாக பிரிக்கப்பட்டது.
அதிகாரங்களாகவும் வசனங்களாகாவும் பிரிக்கப்பட்ட வேதம் கி.பி.1560-ம் ஆண்டு முதல் முறையாக “ஜெனிவா பைபிள்” என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
வேதாகமத்தில் 66 புத்தகங்கள் உள்ளன.
நம்முடைய வேதாகமத்திலே மொத்தம் 1189 அதிகாரங்கள் உள்ளன.
பழைய ஏற்பாடுல் உள்ள அதிகாரங்கள் — 929.
புதிய ஏற்பாடுல் உள்ள அதிகாரங்கள் — 260.
மத்திய அதிகாரம் – அதாவது மேலே கூறப்பட்டுள்ள 117 மற்றும் 119 க்கு நடுவில் உள்ள — சங்கீதம் 118.
மத்திய வசனம் — சங்கீதம் 118:8 (கர்த்தர் மேல் பற்றுதலாய் இருப்பதே நலம்).
அதிக வசனங்கள் உள்ள அதிகாரம் — சங்கீதம் 119.
குறைவான வசனங்கள் உள்ள அதிகாரம் — சங்கீதம் 117.
சிறிய வசனம் யோவான் 11:35 இயேசு கண்ணீர் விட்டார்.
பெரிய வசனம் (தமிழில்)– தானியேல் 5:23.
வேதாகமத்தின் கடைசி வார்த்தை “ஆமென்”
வேதத்திலே 1000-வது அதிகாரமாக வருவது யோவான் எழுதின சுவிசேஷம் 3-ம் அதிகாரமாகும்.
வேதாகமம் சுமார் 40 நபர்களால் எழுதப்பட்டது. இவர்களில் படிக்காதவர்கள் (மீனவர்கள், ஆடு மேய்ப்பவர்கள்) முதல் படித்த ஞானி (சாலமன்) வரை எழுதியுள்ளனர்.
வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள 3000 -க்கும் மேற்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியுள்ளன. இன்னும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேற உள்ளன.
ஆங்கில வேதாகமத்தில் 3000 – க்கும் மேல் “கர்த்தர் சொன்னதாவது” என்று பொருள்பட எழுதப்பட்டுள்ளது.
அதிக புத்தகங்கள் பரிசுத்த பவுல் (மொத்தம் 13 புத்தகங்கள்) புதிய ஏற்பாட்டில் எழுதியுள்ளார்.
வேதத்திலே மொத்தம் 7 தற்கொலைகள் குறிக்கப்பட்டுள்ளன.
மத்தேயு சுவிசேஷம் 13-ம் அதிகாரத்தில் ஏழு உவமைகள் கூறப்பட்டிருக்கின்றது.
உலகின் பல சட்டங்கள் வேதத்தின் அடிப்படையில் எழுதப்பட்டவை.
இந்திய மொழிகளிலேயே முதல் முதலாக நம்முடைய தமிழ் மொழியில் தான் பரிசுத்த வேதாகமம் அச்சடிக்கப்பட்டது. தமிழ் மொழியில் பழைய ஏற்பாடு அச்சடிக்கப்பட்டு வெளியிட்டம் வருடம் கி.பி 1728-ஆகும்.
தமிழ் கிறிஸ்தவர்கள் அதிகமாக உபயோகப்படுத்தும் மொழிப்பெயர்ப்பு (BSI OV Version) “பவர் மொழிப்பெயர்ப்பு” அல்லது “ஐக்கிய மொழிப்பெயர்ப்பு” ஆகும். ஹென்றி பவர் என்பவர் தலைமையில் முழுவேதாகமும் திருத்தப்பட்டு சரியான முறையில் அச்சடிக்கப்பட்டு கி.பி.1871-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
சுமார் 2000 (கிறிஸ்துவுக்கு பின்) வருடங்களாக பலர் வேதாமத்தை அழித்துவிட வேண்டும் என்று அதை எரித்தனர், கிழித்தனர், வேதாகமத்தை தடுத்தனர். ஆனால் 1200 க்கும் மேற்பட்ட மொழிகளில் அச்சடிக்கப்பட்டு உலகம் முழுவதும் ஒரு நாளிற்கு சுமார் 168,000 வேதாகமங்கள் கொடுக்கப்படுகிறது. ஒரு நிமிடத்திருக்கு சுமார் 58 வேதாகமங்கள் கொடுக்கப்படுகிறது.
இறுதியாக… உலகில் பல புத்தகங்கள் அறிவை கொடுக்கும், பல சந்தோசத்தை கொடுக்கும். ஆனால் பரிசுத்த வேதாகமம் ஒன்று தான் அறிவு, சந்தோசத்தோடு சமாதானத்தையும் இருதய மாற்றத்தையும் கொடுக்கும். அது இயேசுவை, அவர் அன்பை காட்டும், இரட்சிப்பை கொடுக்கும், பரலோக ராஜ்ஜியம் சேர்க்கும். அது வெறும் காகிதமல்ல….. பரிசுத்த தேவனின் வார்த்தைகளை தாங்கி நிற்கும் உயிருள்ள இதயத்துடிப்புக்கள்.
நாம் வேதம் வாசிக்கும்போது, கடவுள் இந்த இடத்தில் என்னிடம் என்ன சொல்ல விரும்புகிறார்? என்று யோசித்து, அவருடைய ஞானத்திற்காக ஜெபிப்போம். கர்த்தருடைய ஞானம் அளவற்றது. அவருடைய வார்த்தைகளில்தான் எத்தனை பொருள்கள் அடங்கியிருக்கின்றன! இதை படித்த பிறகு உங்களால் நம் பரிசுத்த வேதாகமத்தை முத்தம் செய்யாமல் இருக்க முடியாது. இது வெறும் புத்தகமல்ல…. கடவுளின்அற்புத புதையல்…!!!
0 Comments