Lent என்பதின் தமிழ் ஒலி பெயர்ப்பு (Transliteration) தான் லெந்து.
Lent என்ற வார்த்தை, ஜெர்மானிய மற்றும் பழைய ஆங்கிலச் சொல்லை பின்பற்றி வந்த ஒரு சொல்.
தவம் (Penance) என்ற தமிழ்ச் சொல்லின் பொருள் "செய்த பாவங்களுக்காக மனவருத்தத்தால் செய்யப்படும் எந்தவொரு செயலும் அல்லது செயல்களின் தொகுப்பாகும்."
இந்த கருத்து மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் தான் 40 நாள்கள் ஆசரிக்கப்படுவதால், தவக்காலம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அர்த்தமிக்கது.
வசந்த காலத்தில் (Spring) இந்த 40 நாள்கள் வருவதால் Lent என்ற வார்த்தை பயன்பாட்டில் வந்தது. வேறு பின்னணி இல்லை. மேலும் Lent என்ற வார்த்தையும் பயன்படுத்துவது தவறில்லை.
லெந்து என்பது வசந்தம் என்னும் அர்த்தத்தை மட்டும் தருகிறது. தபசு என்பது 40 நாள்களின் நோக்கத்தையே நேரடியாக குறிக்கிறது. லெந்து என்னும் பிற மொழிக்கு பதில் தபசு (தவம்) என்னும் தமிழ் சொல்லைப் பயன்படுத்தினால் சிறப்பு.
மேயேகோ

0 Comments