ஃபேனி கிராஸ்பி (Fanny Crosby, 1820–1915) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த மிகச்சிறந்த கிறிஸ்தவப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர். சிறு வயதிலேயே பார்வையை இழந்த போதிலும், 8,000-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களை எழுதி என்று அழைக்கப்படுபவர். "
பிறப்பு: மார்ச் 24, 1820-ல் நியூயார்க்கில் பிறந்தார்.
பார்வை இழப்பு: தவறான சிகிச்சை காரணமாக தனது ஆறாவது வாரத்தில் பார்வையை இழந்தார்.
வாழ்க்கை:
1835ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதியன்று ஃபேனி மகிழ்ச்சியுடன் வண்டியில் ஏறி , நியூயார்க்கிற்குப் பயணம் செய்தார் . அங்கே பார்வையற்றோர் பள்ளியில் 12 ஆண்டுகள் மாணவியாகவும் , 11 ஆண்டுகள் ஆசிரியையாகவும் , மொத்தம் 23 ஆண்டுகள் செலவிட்டார் .
சாதனை: 8,000-க்கும் மேற்பட்ட பாடல்கள், பல கவிதைகள் மற்றும் இரண்டு சுயசரிதைகளை எழுதியுள்ளார்.
சிறப்பு: "நற்செய்தி பாடல்களின் ராணி"
தனித்திறமை: பார்வையற்றவராக இருந்தாலும், தனது விசுவாசம் மற்றும் கவித்திறமை
8 அமெரிக்க அதிபர்களுக்கு காலகட்டத்தில் புகழ்பெற்ற கவிஞர்.
வெளியீடு:
1844 - ல் " பார்வையற்ற பெண் மற்றும் அவளின் கவிதைகள் " ( A Blind Girl and other Poems ) என்ற தலைப்புடன் அவரது கவிதைகளின் முதல் வெளியீடு வெளிவந்தது .
1849 - ல் " Monterey and other poems " என்ற நூல் வெளிவந்தது . 1858இல் “ கொலம்பியாவின் மலர்ச்செண்டு " ( A Wreath of Colmbia ' s Flowers ) வெளியிடப்பட்டது .
1853 முதல் 1858 வரை அவர் பல பாடல்களை எழுதினார் . அவற்றிற்கு ஜார்ஜ் எஃப் ரூட் என்பவர் இசையமைத்தார் . “ புல்வெளியில் மலரான ரோசலின் ” ( Rosaline the Praise Flower ) “ ஹேஸல் டெல் " ( Hazel dell ) மற்றும் “ காற்றில் வரும் நாதம் ” ( There ' s is Music in theAir ),Blessed Assurance", "Pass Me Not, O Gentle Saviour", "Rescue the Perishing".ஆகியப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றன.
8000 அதிகமாக இவர் எழுதிய பாடல்கள் புகழ்பெற்ற பாடல்கள் ஆயின.
கவிதை:
“ ஓ எத்தனை மகிழ்ச்சியான ஆன்மா நான் ! பார்க்க முடியாதிருந்தும் , இப்பூவுலகில் நான் மனநிறைவுள்ளவளாக இருக்கத் தீர்மானித்து விட்டாள் . பிறர் அனுபவிக்க முடியாத எத்தனையோ ஆசீர்வாதங்களை நான் அனுபவிக்கிறேன் . நான் பார்வையற்றவளாயிருக்கும் காரணத்திற்காக கதறுவதும் , விம்முவதும் என்னால் முடியாது : நான் அப்படிச் செய்யமாட்டேன் ! "
"நான் பார்வையற்ற வளாயிருப்பதற்காக சற்றும் வருந்தவில்லை . ஏனெனில் , நான் நித்திய வீட்டிற்கு செல்லும்போது , என் கண்கள் திறக்கப்படும் . அப்பொழுது என் கண்களால் முதன் முதலில் என் இரட்சகரைக் காண்பேன் "
இறப்பு: 1915 இல், தனது 95வது பிறந்த நாளைக் காண்பதற்குச் சற்று முன்பாக , அதிகாலை மூன்று மணியளவில் அவர் தனது மீட்பரின் கரங்களில் போய்ச் சேர்ந்தார் .

0 Comments