Ad Code

உலக சுகாதார தினம் • World Health Day • April 7 • WHO

உலக சுகாதார தினம் (World Health Day) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

நோக்கம்: உலக சுகாதார நிறுவனம் (WHO) தொடங்கப்பட்ட தினத்தை (ஏப்ரல் 7, 1948) நினைவுகூரும் வகையிலும், உலகளாவிய சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.

1950 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஆம் தேதியை உலக சுகாதார தினமாகக் கொண்டாட மாநாடு முடிவு செய்தது. 

இந்தத் தினத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஒரு குறிப்பிட்ட சுகாதாரப் பிரச்சனை முன்னிலைப்படுத்தப்பட்டு, அது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தாய்சேய் நலம், மன ஆரோக்கியம் மற்றும் நோய்த் தடுப்பு போன்ற பல்வேறு தலைப்புகளில் விவாதங்களும் நிகழ்வுகளும் WHO போன்ற அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

Post a Comment

0 Comments