Ad Code

அப்பொல்லோ Apollos Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 93 
அப்பொல்லோ: கற்றுக்கொள்ளும் தாழ்மை

1. பெயர்:  
அப்பொல்லோ Apollos

2. அர்த்தம்: 
அப்போலோ இறைவனுக்குரியவன்

3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
அப்போஸ்தலர் 18:24-28: எபேசுவில் பிரசங்கித்தல்; ஆக்கில்லா-பிரிஸ்கில்லாவிடம் தேவ வழியைக் கற்றுக்கொள்ளுதல்.

அப்போஸ்தலர் 19:1 / 1 கொரிந்தியர் 3:6: கொரிந்துவில் ஊழியம் செய்து நீர்ப்பாய்ச்சுதல் ("நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான்").

தீத்து 3:13: பவுலால் பிரயாண உதவி பெறப் பரிந்துரைக்கப்படுதல்.

4. வரலாற்றுக் குறிப்புகள்
• பிறப்பிடம்: கல்வி மையமான எகிப்தின் அலெக்சாந்திரியா நகரம்.
• திறமை: சிறந்த நாவன்மையும் வேதவாக்கியங்களில் வல்லமையும் கொண்டவர்.
• அனுபவம்: ஆரம்பத்தில் யோவானின் ஞானஸ்நானத்தை மட்டுமே அறிந்திருந்தார்.
• ஊழியம்: ஆக்கில்லா-பிரிஸ்கில்லா வழிகாட்டுதலுக்குப் பின், இயேசுவே கிறிஸ்து என திறம்பட நிரூபித்தார் (எபிரேயர் நிருபத்தின் ஆசிரியராகவும் கருதப்படுகிறார்).

5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
அப்பொல்லோ மிகப்பெரிய கல்விமானாகவும், மக்கள் போற்றும் பிரசங்கியாகவும் இருந்தபோதிலும், சாதாரணக் கூடாரம் பண்ணும் தொழிலாளர்களான ஆக்கில்லா-பிரிஸ்கில்லா தம்பதியர் தேவனுடைய வழியை விளக்கிக் கூறியபோது, அதைத் தாழ்மையோடு கேட்டு ஏற்றுக்கொண்டார்.

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil


Post a Comment

0 Comments