Ad Code

சாமி நம்ம சாமி

சாமி நம்ம சாமி.... சாமி இயேசு சாமி...


சாமி பொதுவான சாமி - இயேசு
சாமி பொதுவான சாமி
    ஏழை எளியவர்க்கும் செல்வமுள்ள செல்வந்தர்க்கும்
    வேண்டியதைக் கொடுப்பதற்கும் வேண்டாததை எடுப்பதற்கும்.....

1.இயேசு பிறந்ததொரு குடிசையில
ஏழை ஜனங்களோட மத்தியில 
நல்லா நெனச்சுப்பாரு புத்தியில
அவரிருக்காரு உன்னோட மனசினிலே
சாமி தந்த சாமி இந்த பூமியிலே மனுஷனாக 
வந்ததென்ன செய்தி ஏதுக்கு புரியலையா?
மனுஷன மனுஷனாக மதிக்கும் வழியைச் சொன்னவராம்
ராஜனோட பாதை உனக்கு தெரியலையா?

2. அடிதடி சண்டை உள்ள ஊரினிலே
அன்பாயிருக்க சொல்லி வந்தவரு
சொன்னதெல்லாம் சொன்னதோடு நிற்கவில்லை
சொன்னதெல்லாம் சொன்னபடி செஞ்சவரு
நேசத்தோடு பாசமுடன் நித்தமும் இயேசுவைப்போல்
வாழ வழி அமைத்திட வேண்டுமையா
கள்ள கபடமில்லாத குழந்தையைப் போலிருந்த
அவரவருக்கு நீர் தானே முதல்வரையா

    சாமியை நம்பு நம்பு அவர்தானே தெம்பு தெம்பு
    ஏனையா வம்பு கீம்பு எல்லமிங்கே அன்பு அன்பு.

Post a Comment

0 Comments