1. ஒரு தொடர்ச்சியான வேத பகுதியை One Passage for One Day) தெரிந்தெடுங்கள். நீங்கள் புதிதாக ஆரம்பிக்கிறீர்கள் என்றால், எபேசியர் நிருபத்திலிருந்து ஆரம்பிக்கலாம். தயவு செய்து எந்தவொரு வெளியிடப்பட்ட தியான புத்தகத்தை சார்ந்து உங்கள் தனி தியானத்தை வைக்காதீர்கள். அவற்றையும் வாசிப்பது நன்று. ஆனால் அவை தனி தியானத்திற்கு ஈடாகா.
2. ஒரு அமைதியான இடத்தில், காலையோ, மாலையோ, உங்களுக்கு ஃப்ரீயான நேரத்தில், உங்கள் சொந்த வேதாகமம் டைரி, பேன் ஆகியவற்றோடு காத்திருங்கள்.
3. கடவுள் உங்களுக்கு கற்றுத் தரும்படிக்கு அவரிடத்தில் ஜெபியுங்கள். தனி தியானம் என்பது உங்கள் சுய ஞானம், படிப்பு, அனுபவங்கள் இவற்றை சார்ந்தது அல்ல.
4. நீங்கள் அந்த நாளுக்குரிய ஒரே ஒரு வேத பகுதியை நன்றாக மனதில் புரியும் வரை மீண்டும் மீண்டும் வாசியுங்கள். உங்களுக்கு தெரிந்த அனைத்து மொழிகளிலும் வாசிக்க முயற்சி செய்யலாம். அந்த வேத பகுதிக்கு பின்னணி அறிந்து வாசியுங்கள்.
5. அந்த வேத பகுதிக்கு தலைப்பு ஒன்றைக் கொடுங்கள். தேதி, வேத பகுதி மற்றும் தலைப்பினை டைரியில் எழுதுங்கள்.
6. அந்த வேத பகுதி கற்பிக்கும் பாடங்களை நீங்கள் புரிந்து கொண்ட வண்ணம் வரிசையாக எழுதுங்கள். கட்டளைகள், வாக்குகள், பாவங்கள், நற்குணங்கள் etc போன்றவற்றை குறிப்பு எடுங்கள். டைரியில் எழுதும் போது, கவனத்தில் கொள்ள வேண்டியது, நீண்ட கட்டுரை போலோ, பிரசங்கம் போலோ, விளக்கவுரை போலோ எழுதக் கூடாது. மாறாக, குறிப்புகள் போல் எழுத வேண்டும்.
7. நீங்கள் வாசித்த வேத பகுதியில் இருந்து கற்ற பாடங்களை உங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்து, நான் என்று தன்வினை ஒருமையில் அன்றைய நாளில் எடுத்த தீர்மானங்களை எழுத வேண்டும். இதுதான் தனிதியானத்தின் முக்கிய அம்சமாகும். தீர்மானங்கள் அன்றைய வேத பகுதிக்குள் இருந்து மாத்திரமே எடுக்க வேண்டும்.
8. பின்னர், தியானித்த காரியங்களுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்தி, அவற்றை சொல்லி ஜெபித்து ஒப்புக்கொடுக்க வேண்டும்.
9. உங்கள் தனி தியானம் குறித்து, உங்கள் ஆவிக்குரிய நண்பரோடு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
10. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது, உங்கள் Quite Time Dairy யில் எழுதிய பழைய குறிப்புகளை வாசித்து, உங்களை சீர்தூக்கி பார்த்து கடவுளை மகிமைபடுத்துங்கள்.
0 Comments