1870 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை சாா்ந்த மருத்துவ மிஷனேரி டாக்டர் ஜான் மில்லர் ஸ்ட்ராஹ்ன் M.D அவர்களால் நாசரேத் மருத்துவமனை நிறுவப்பட்டது. 1871 ஆண்டு மட்டும் சுமாா் 40,000 நோயாளிகள் மருத்துவமனையில் மருத்துவ உதவி பெற்றுள்ளாா்கள்.
"நோயாளிகளைக் குணப்படுத்தவும், நற்செய்தியைப் பிரசங்கிக்கவும்" என்ற பொன் மொழியுடன் நிறுவப்பட்ட இந்த மருத்துவமனையில் பிணியாளிகளுக்கு தினமும் காலை, மாலை ஆராதனை சிற்றாலயத்தில் தொடங்கபட்டது. மட்டும்மல்லாது வேலை தொடங்கும் முன் பணியில் உள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனிதனியாக சுருக்கமாக ஆராதனைகள் மருத்துவமனை சிற்றாலயத்தில் நடைபெற்றன.
டாக்டர் ஸ்ட்ராஹ்ன் அவர்களுக்கு இரண்டு ஆசைகள் இருந்தது. நாசரேத் மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்றும் செவிலியர் கல்லூரி மற்றும் மருத்துவ கல்லூரி நாசரேத்தில் நிறுவபட வேண்டும் என்பது தான் அவருடைய வாஞ்சையாக இருந்தது.
1876 வருடம் மருத்துவமனை பொறுப்பை இங்கிலாந்தை சோ்ந்த கனம் ஆர்தர் மா்காஷிஸ் ஜயர் அவர்கள் ஏற்று கொண்டார்கள்.
1892 வருடம் அக்டோபர் 18 தேதி பாிசுத்த லூக்காவின் திருநாள் அன்று "புனித லூக்கா மருத்துவமனை" என்ற பெயருடன் மா்காஷிஸ் ஜயர் அவர்களால் கட்டபட்ட புதிய கட்டிடத்தில் கனம் மா்காஷிஸ் அவர்களால் மருத்துவமனை பிரதிஷ்டை செய்யபட்டது.
புனித லூக்கா மருத்துவமனை 19 நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டின் பொிய மருத்துவமனை என்றழைக்கபட்டது . இம்மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற தமிழ்நாடு முழுவதும் நோயாளிகள் வந்து தங்கி சுகம் பெற்று திரும்பி சென்றுள்ளனா்.
ஆங்கில மிஷனேரிகளின் அர்பணிப்பு ,தியாகம் , ஊழிய வாஞ்சையால் உருவான புனித லூக்கா மருத்துவமனையின் நோக்கம் நிறைவேறியதா என்பதை மருத்துவமனையின் தற்போதைய வளர்ச்சியை வைத்து நாம் அறிந்துகொள்ளலாம்.
1900 ஆம் ஆண்டில், வேலூரில் தொடங்கப்பட்ட "கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி" CMC இப்போது உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையாக மாறிவிட்டது. நாசரேத்தில் ஆங்கில மிஷனேரிகளால் 1870 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 151 வருடங்கள் கடந்த "புனித லூக்கா மருத்துவமனையின்" வளர்ச்சி இப்பொழுது உலகதரம் வாய்ந்த மருத்துவமனையாக உள்ளதா என்பது ???????
1 Comments
Thanks for Sharing....Cathedral Team Nazareth.
ReplyDelete