1965 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தில் மிஷன் பணி செய்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிஷனரியான கிரஹாம் ஸ்டெயின்ஸ் தன் வாழ்வில் பாதிக்கும் மேற்பட்ட காலத்தை செலவழித்த தொழுநோய் இல்லத்தில் தான், 1999 ஜனவரி 22 ஆம் தேதி மதியம் தொழுநோயாளிகளுடன் சேர்ந்து தனது அரிசி சோற்றை மதிய உணவாக சாப்பிட்டார்.
பிறகு நகரில் தேவாலயம் அருகே உள்ள அவருடைய வீட்டுக்கு சில பேருடன் சென்றார். பின்பு அவர்களுடன் மனோகர்பூர் செல்ல வேண்டியிருந்தது. அவருடைய மகனும், மகளும் கூட அங்கே செல்ல வேண்டும் என வற்புறுத்தினார்கள். தாயாருடன் இருக்குமாறு மகளிடம் கூறிவிட்டு, மனோகர்பூரில் சிறிய தேவாலயம் ஒன்றில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க கிரஹாம் ஸ்டெயின்சும், அவருடைய மகன்களும் இரண்டு ஜீப்களில் அங்கே சென்று இருக்கிறார்கள்.
ஆலய நிகழ்ச்சிக்குப் பின்னர், இரவு உணவு முடிந்ததும் ஒருவருக்கொருவர் இரவு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டு தூங்கச் சென்றுவிட்டார்கள். கிரஹாமும், அவருடைய மகன்களும் பெரிய கொசு வலை ஒன்றை தொங்கவிட்டு, ஜீப்பிற்குள் தூங்கினார்கள்.
இரவு 12 மணி அளவில் ஜீப்பை அடித்து நொறுக்கும் சப்தம் கேட்டது. நிமாய் என்ற கிரகாமிற்கு தெரிந்தவர் வீட்டில் இருந்து வெளியே வந்தவர், :ஜீப்பை சுற்றி நிறைய பேர் இருந்து தாக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்'' என்று அவர் கூறினார். அவர்களை நெருங்கி, ஏன் தாக்குகிறீர்ரகள் என கேட்டதாக நிமய் தெரிவித்தார்.
அவர் அவ்வாறு கேட்டதும், "அவனையும் சேர்த்து கொன்றுவிடுங்கள்'' என்று கூட்டத்தில் இருந்து ஒருவர் சப்தம் போட்டு அவரையும் தாக்கத் தொடங்கினார்கள். நிமய் ஓடிச் சென்று தீயை அணைப்பதற்கு தண்ணீர் கொண்டு வர மறுபடியும் தாக்கினார்கள். அவர் கிராமத்தினரை கூப்பிட்டு, மூவரையும் காப்பாற்ற நான் முயற்சி செய்வதற்குள் டயர்கள் வெடிக்கத் தொடங்கிவிட்டன. கிராம மக்கள் ஓடி வருவதற்குள் கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவருடைய மகன்களுடன் ஜீப் எரிந்துவிட்டது. எல்லாமே முடிந்துவிட்டது.
கென்டுஜ்ஹர் மாவட்டத்தில் மனோகர்பூர் கிராமத்தில், கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவருடைய இரண்டு மகன்கள் பிலிப் (வயது 10), திமோதி (வயது 8) ஆகியோரை கலகக்கார கும்பல் ஒன்று ஸ்டெயின்ஸின் ஜீப்பில் வைத்து எரித்துக் கொன்றுவிட்டது.
"தொழுநோயாளிகளுக்கு சேவை செய்வதாகக் கூறிக் கொண்டு, ஏழை ஆதிவாசிகளை கிரஹாம் ஸ்டெயின்ஸ் மதமாற்றம் செய்கிறார்'' என்று அந்தக் கும்பல் நம்பியிருந்தது. அது போல, ஆலயத்தில் நிகழ்ச்சிகள் என்ற பெயரில் ரகசியமாக மதமாற்ற சம்பிரதாயங்கள் அங்கு நடப்பதாக, அவர்களைக் கொலை செய்தவர்கள் நினைத்திருப்பார்கள் போல தெரிகிறது.
கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவருடைய மகன்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக புலன்விசாரணை செய்த வாத்வா ஆணையம், கிரஹாம் மதமாற்ற செயல்களில் ஈடுபட்டார் என்ற புகார்களை நிராகரித்துவிட்டது.
அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய தாரா சிங் உட்பட 13 நபர்களும் கைதுசெய்யப்பட்டனர். இதற்கென்று அமைக்கப்பட்ட சிறப்பு நீதி மன்றத்தில் வழக்குநடைபெற்று 2003 -ம் ஆண்டு தாராசிங்குக்கு தூக்குத் தண்டனையும் மற்ற12 பேர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தாராசிங் தரப்பில் ஒடிசா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, 2005-ம் ஆண்டு தாரா சிங்குக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 12 பேர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் விடுதலைச் செய்யப்பட்டனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. 2011 -ம் ஆண்டு ஒடிசா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
ஆனால்
இந்தத் தீர்ப்பு வழக்குப் பற்றியெல்லாம் யோசிக்காமல் கிரஹாம் ஸ்டெயின்ஸின் மனைவி கிளாடிஸ் மீண்டுமாக ஆஸ்திரேலியாவுக்கே சென்று, அங்கு கிறித்தவ ஊழியத்தை நிறைவேற்றி வருகிறார். 2011-ம் வருடம் உறுதி செய்யப்பட்ட இறுதித் தீர்ப்பு வந்தபோது, கிளாடிஸிடம் அவரது கணவரையும் இரண்டு பிள்ளைகளையும் கொன்றவர்கள் பற்றி கருத்துக் கேட்கப்பட்டது. அப்போது கிளாடிஸ் என்ன சொன்னார் தெரியுமா "அவர்களை நான் எப்போதோ மன்னித்து விட்டேன்."
0 Comments