சுமார் 60 லட்சம் (ஆறு மில்லியன்) யூதர்கள், ஐரோப்பாவின் யூத மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் நாஜி ஆட்சி மற்றும் அதன் ஒத்துழைப்பாளர்களால் கொல்லப்பட்டனர்.
1945ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி அன்று நாஜி மரண முகாமில் மீதமிருந்த யூதர்களை சோவியத் படைகள் விடுவித்தது. ஆகவே இந்த நாளில் இது ஆசரிக்கப்படுகிறது.
இந்த நினைவு நாள் ஆசரிப்புக் குறித்து, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானமானது ( எண் 60/7 ) 1 நவம்பர் 2005 அன்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இதுபோன்ற இனப்படுகொலைகள் மீண்டும் நடக்காமல் இருக்க ஐ.நா.அமைப்பு 2006ஆம் ஆண்டிலிருந்து இத்தினத்தை கடைபிடிக்கிறது.
0 Comments