Ad Code

உலக தொழுநோய் ஒழிப்பு தினம் | World Leprosy Day | குஷ்டரோகம் விழிப்புணர்வு

வ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக தொழுநோய் (குஷ்டரோகம்) தினம் அனுசரிக்கப்படுகிறது.

தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பரிவு கொண்டிருந்த மகாத்மா காந்தியின் வாழ்க்கைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இந்த தேதியை பிரெஞ்சு மனிதநேயவாதியான ரவுல் ஃபோலேரோ தேர்ந்தெடுத்தார். 

 தொழுநோய் அல்லது ஹேன்சன் நோய் குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிக்க, 1954 ஆம் ஆண்டு முதல் இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தொழுநோய் என்பது உலகில் பதிவுசெய்யப்பட்ட பழமையான நோய்களில் ஒன்றாகும். இது நரம்பு மண்டலத்தை குறிவைக்கும் ஒரு தொற்று நாள்பட்ட நோயாகும், குறிப்பாக உடலின் குளிர்ச்சியான பகுதிகளில் உள்ள நரம்புகள்: கைகள், கால்கள் மற்றும் முகம் போன்ற பகுதிகளில் துவக்கத்தில் வருகிறது.

Post a Comment

0 Comments