Ad Code

14 இரத்தஞ்சிந்தி எதிர்த்தீர்களா? | Is Stirving against with Bloodshed | ரோமர் 12.4 Romans | திருமறை தியானம்

தியானம் : 14 / 27.02.2022
தலைப்பு : இரத்தஞ்சிந்தி எதிர்த்தீர்களா?
திருவசனம் : எபிரெயர் 12.04 "பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்துமளவிற்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே."

முகவுரை

இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். இரத்தம் நம் உடலில் மிக முக்கியமான ஒன்று. நமது உயிர் இரத்தத்தில் இருக்கிறது. தேசத்திற்காக இரத்தம் சிந்தியவர்களைப் பற்றி கேட்டிருக்கிறோம். ஆனால் தனது வாழ்வின் பரிசுத்த ஜீவியத்திற்காக இரத்தம் சிந்தியவர்களை பற்றி அறிந்திருக்கிறோமா? நீங்கள் சிந்தித்துப் பாருங்கள், இந்த தவறை செய்யக் கூடாது என்பதற்காக உங்கள் ஒரு சொட்டு இரத்தத்தையாவது சிந்தியது உண்டா?

பின்னணி

எபிரெயருக்கு ஆக்கியோர், சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக உபத்திரத்தை சந்தித்த யூத கிறிஸ்தவர்களிடம், இன்னும் நீங்கள் இரத்தம் சிந்துகிற அளவிற்கு உபத்திரவத்தை சந்திக்கவில்லையே என்று கேட்கிறார். ஏனென்றால், இதற்கு முன்பு யாக்கோபு மற்றும் ஸ்தேவான் ஆகியோர் கடவுளின் நாமத்தைத் தூசிக்காத வண்ணம் வாழ்ந்து இரத்த சாட்சியாக மரித்தார்கள். அந்த நிலையில் இவர்கள் இல்லை என்றாலும், அப்பேர்ப்பட்ட சூழ்நிலை வரும் போது அதை மேற்கொள்ளவும் தயாராயிருக்க கற்றுக் கொடுக்கிறார். இந்த வசனத்தில் பாவம், கிறிஸ்தவர்களின் எதிரியாகக் உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

தினசரி வாழ்க்கையில், சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக சில பிரச்சனைகளை சந்திக்கும் போது, பாவ ஆசைகளில் சிக்குண்டு விழுந்து போகின்ற நிலையில் வாழ்கின்றவர்களை காண்கிறோம். தினமும் பரிசுத்தமாக வாழ போராடுகிறேன்; உடலும் மனமும் போராடியும் முடியவில்லை என்று நாமே சொல்லியிருப்போம். எடுத்த தீர்மானத்தில் நிலைக்காதப்படிக்கு விழுந்து போயிருக்கலாம். காரணம் என்னவென்றால்...

1. எதிர்த்து நிற்க தயாராக இல்லை 
  (Stand against sin)

2. போராட தயாராக இல்லை 
   (Stirving against sin)

3. இழக்க தயாராக இல்லை 
    (Sacrifice against sin)

நிறைவுரை
பரிசுத்தமாக வாழ தடையாக இருக்கக்கூடிய காரியங்களை எதிர்க்கவும், போராடவும், இழக்கவும், நாம் தயாராக இருப்பதில்லை. அதை தான் இந்த ஒப்புமை வெளிக்கொணருகிறது. மண்ணிற்காக மாணிக்கத்தை விட்டுவிடக் கூடாது. தீர்மானம் எடுத்த நாம், ஒவ்வொரு நாளும் எது முக்கியம் என்பதை நம் சிந்தையில் நிறுத்த வேண்டும். பாவத்தை விட பரிசுத்தம் முக்கியம். அந்த பரிசுத்தத்தை காக்க உபத்திரவத்தை சகிக்க முன்வருவோம். இறையாசி உங்களோடிருப்பதாக.

Post a Comment

0 Comments