முகவுரை
இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். "உடல் தான் இங்கே இருக்கிறது; உள்ளம் எங்கேயோ இருக்கிறது" என்று சொல்வதை கேட்டிருப்போம். பல நேரங்களில் நாம் சரியாக கற்றுக்கொள்ளாததற்கும், பணிகளை நேர்த்தியாக செய்யாததற்கும் தவறான புரிந்துகொள்ளுதல் அல்லது புரியாதத்தன்மை முக்கிய காரணமாக இருக்கலாம். ஏதோ ஒன்றை எடுத்துவர சொல்லியிருப்பார்கள்; நாம் ஒன்றை கொண்டு சென்றிருப்போம். இதே போல தான் இயேசுகிறிஸ்து படகிலே பயணம் செய்து போது ஒரு முக்கியமான காரியத்தை குறித்து பேசுகிறார்; சீஷர்களோ தவறாக புரிந்துகொண்டு வேறு பதில் அளிக்கிறார்கள்.
விளக்கவுரை
இயேசுகிறிஸ்து சில கேள்விகளை முன்வைத்தார்? இன்னுமா உணராமலும் புரிந்து கொள்ளாமலும் இருக்கிறீர்கள்? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா? ஏன், உங்களுக்கு நினைவில்லையா? பின்னும் இரண்டு முறை இயேசு மக்களுக்கு அற்புதமாக உணவு கொடுத்ததை வைத்து கேள்விகள் கேட்டார்.
இந்த கேள்விகள் எதை வெளிப்படுத்துகின்றன? சீஷர்கள் மனநிலை எப்படி இருந்தது? இயேசு கிறிஸ்து உபதேசத்தை குறித்து (ஆவிக்குரிய ரீதியாக) பேசும்போது இவர்கள் உலக பிரகாரமான சிந்தையில் இருப்பதைக் காண முடிகிறது. கவனம் வேறு எங்கேயோ இருந்திருக்க வாய்ப்புண்டு. ஆகவே அவர்களால் நேர்த்தியாக புரிந்துகொண்டு சரியாக பதில் கூற முடியவில்லை.
நிறைவுரை
எத பத்தி பேசிக்கிட்டு இருக்கோம்; நீ என்னத்த சொல்லுற? என்பதை நாமே பயன்படுத்தி இருப்போம். இதற்கு புரிந்துகொள்ளாமை அல்லது தவறான புரிதல் தான் காரணம். நீங்களும் நானும் இயேசுவின் உபதேசங்களில் தேறினவர்களாக இருக்கவேண்டும். ஆண்டவரின் வார்த்தைகளை உணர்ந்து கொள்ள ஒரே சிந்தையில் நம் இருதயத்தை திறந்த மனப்பாங்கோடு வைக்க வேண்டும். அப்போது நிச்சயமாக கடவுளை மகிமைப்படுத்த முடியும். இறையாசி உங்களோடிருப்பதாக.
0 Comments