Ad Code

9. நாங்கள் என்ன செய்ய வேண்டும்? | What We Shall Do? | திருமறை தியானம் | லூக்கா 3.10 Luke

தியானம் : 9/ 23.02.2022
தலைப்பு : நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
திருவசனம் : லூக்கா 3.10 "அப்பொழுது ஜனங்கள் 5அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள்."

முகவுரை
இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். ஒரு சத்தம் வனாந்தரத்திலே கேட்கிறது; அது யாருடைய சத்தம்? இறைமகன் இயேசுகிறிஸ்துவிற்கு வழியை ஆயத்தப்படுத்தும்படி அனுப்பப்பட்ட புதிய ஏற்பாட்டு எலியாவாகிய திருமுழுக்கு யோவான் என்ற இறைவாக்கினரின் சத்தம். விரியன்பாம்பு குட்டிகளே என்று தைரியமாய் மனந்திரும்புதலுக்கு எச்சரிப்பை கொடுத்த முழக்கம் அது. அந்த சத்தியத்தால் குத்தப்பட்ட மூன்றுவிதமான கூட்டத்தினர் அவரிடம் கேட்டது தான், நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

1. பொதுமக்கள் - பகிர்ந்து வாழுங்கள்

நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட ஜனங்களுக்கு திருமுழுக்கு யோவான் சொன்னது(3:11): "இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்." இது ஒருவருக்கொருவர் பகிர்ந்து வாழ்வும் வாழ்வை வெளிக்கொணருகிறது.

2. ஆயக்காரர்கள் - உண்மையாக வாழுங்கள்

நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட, யூதர்களால் வெறுக்கப்பட்ட வரிதண்டுவோருக்கு அவர் சொன்னது(3:13): "உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள்." இது தொழில் உண்மையில்லாமல், தங்கள் ஆதாயத்திற்காக மற்றவர்களின் பணத்தை பெறக் கூடாது என்பதை வெளிப்படுத்துகிறது.

3. போர்சேவகர்கள் - திருப்தியாக வாழுங்கள்

நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்ட படைவீரர்களிடம் சொன்னது (3.14): "நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்." இது தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நியாயத்தை புரட்டக்கூடாது என்பதை உணர்த்துகிறது.

நிறைவுரை
திருமுழுக்கு யோவான் கற்றுக்கொடுத்த இவை தான் மனந்திரும்புதலுக்கேற்ற கனிகளுக்கான உதாரணங்கள். வருங்கோபத்துக்கு தப்பித்துக் கொள்ள, இன்றே மனந்திரும்பி, கடவுளிடம் சென்று கேளுங்கள்: நான் என்ன செய்ய வேண்டும்? என்று. அவர் கற்பிக்கும் வண்ணம் வாழுங்கள். ஏனென்றால், மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்ட திருமறை தியானம் நமக்கு அழைப்பு கொடுக்கிறது. இறையாசி உங்களோடிருப்பதாக.

Post a Comment

0 Comments