Ad Code

22. பகைவரிடம் அன்பு | டே. ஜோயல் ராஜா சிங் | Love for the Enemies | மத்தேயு 5. 43 - 48


பகைவரிடம் அன்பு 

 டே. ஜோயல் ராஜாசிங் B.A, (BD - 4)                          மருதடியூர், திப்பணம்பட்டி சேகரம், CSI திருநெல்வேலி திருமண்டலம்

அலகாபாத் வேதாகம கல்லூரி, அலகாபாத்.          

 

தியான வசனம்: மத்தேயு 5:43-48

43உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 44நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.  45இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். 46.உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?  47உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?  48ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.

 

முகவுரை:

பல நூற்றாண்டுகளாக ஆலய போதனைகளில் சிறந்த இடத்தை பிடித்துள்ள மலைப்பிரசங்கம், புதிய இறையான்மையை நமக்கு வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளது. வாழ்வின் அடுத்த படிநிலைக்கு நம்மை அழைத்து செல்லக கூடியதாய் காணப்படுகிறது.

 

விளக்கவுரை

பகைவரை அல்லது எதிரியை வெறுக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் உண்டு ஆனால் அவர்களை நேசிப்பது என்பது இன்றைக்கு கடினமான ஒன்றாகும். ஆனால், அருள்நாதர் பகைவர்களை நேசிக்க வேண்டும் (ἀγαπάω - agapaó – Love/ unconditional love) என்று கற்றுகொடுக்கிறார். நம்மை நேசிக்கின்றவர்களை மட்டும் அன்புடன் நடத்தாமல், பகைவர்களை நேசிக்கவும், நம்மை துன்புறுத்துபவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்.

 

கிரேக்க பதத்தில் பகைவர்கள் (χθροςechthros) என்பவர்கள் வெறுப்பவர்கள் அல்லது வெறுக்கப்படுபவர்கள் என்ற பொருளை கொண்டுள்ளது. பகைவர்கள் அல்லது எதிரிகள் என்பவர்கள், காயப்படுத்த மற்றும் தீங்கான நோக்கத்துடன் நம்மை  தொடர முயற்சிக்கும் நபர்களைக் குறிக்கிறது. யூத தலைவர்கள், மூப்ப்ர்கள் இந்த தீய நோக்கத்துடன் இருந்ததால் தான். அவ்வாறு இருக்கக் கூடாது என்று இயேசு கற்றுக்கொடுக்கிறார். இயேசு கிறிஸ்து கற்பித்ததை ஒரு மனிதன் இங்கே கடைப்பிடித்தால், அவன் உண்மையிலேயே வேதபாரகர் மற்றும் பரிசேயர்களை விட மேலான நீதியைப் பெறுவான் (மத்தேயு 5:20) என்று வேதத்தில் பார்கிறோம்.

 

பகைவர்களை நேசிப்பது கற்பனையானது அல்ல. இது வெறும் உணர்ச்சியல்ல. இது உறுதியானது, உண்மையானது மற்றும் மாயமற்றது. வார்த்தயிலும் செயலிலும் உளப்பூர்வமாக நாம் நேசிக்க வேண்டும். இயேசு ஒரு உறுதியான வழியைக் கொடுக்கிறார், அது அவர்களுக்காக அவர்களின் இரட்சிப்புக்காக ஜெபிப்பதாகும். மேலும் ஒருவரையொருவர் வாழ்த்துவதில் பணப்பிரியன் கொண்ட வரித்தண்டுவோர் போல பட்சப்பாதம் காட்டக் கூடாது. சகோதரரோ, அந்நியரோ அன்போடு நடக்க வேண்டும்.

 

பகைவரை நேசிப்பதால் கடவுளின் புத்திரராகிறோம். ஏனென்றால் அவரும் அன்புள்ள தந்தையே. அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார். நம் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நாமும் நிறைவுள்ளவர்களாய் வாழ வேண்டும்.

 

சிந்தனைக்கு:

அருள்நாதர் இயேசு கிறிஸ்து, நாம் பாவிகளாக, எதிரிகளாக இருந்தபோது அவர் நமக்காக மரித்தார் (ரோமர் 5:6-11), அதுவே கடவுளின் எல்லையற்ற அன்பின் முழு அளவுகோலாகும்.  இயேசு கிறிஸ்து நிராகரிக்கப்பட்டார், கேலி செய்யப்பட்டார், சிலுவையில் அறையப்பட்டார். ஆனால் அவர் சிலுவையில் இருந்தபோது, ​​அவர் தனது எதிரிகளுக்காக ஜெபம் செய்தார். தந்தையே, இவர்களை மன்னியுங்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது (லூக்கா 23:34) என பிதாவுடம் மன்றாடுகிறார். இந்த சூழ்நிலையில் தன்னை பகைத்தவர்களிடம் தன்னுடைய அன்பை பிரதிபலிப்பதை கானலாம்.

 

நம்மை புண்படுத்தும், அல்லது அவமதிக்கும், நம்மை கோபப்படுத்த, அல்லது நம்மை ஏமாற்ற முயற்சிக்கும் நபர்களை நேசித்து, ஏற்றுக்கொண்டு அவர்களுக்காக ஜெபித்து அவர்களும் அன்புக்குரியவர்கள் என்பதை இன்று இயேசு நமக்கு நினைவூட்டுகிறார். பரிசுத்த மத்தேயு எழுதின சுவிஷேம் 5:43-48, வசனத்தின் மைய கருத்தாக பகைவர்களை நேசிக்கவும், அவர்களை ஏற்றுக்கொள்ளவும் நமக்கு கற்றுகொடுக்கிறபடி, பகைவரிடம் அன்பு பாராட்டி, அன்பின் வடிவான நம் அருள்நாதரை பின்பற்றுவோமாக. ஆமென்.


 

Post a Comment

0 Comments