Ad Code

ஒன்று முதல் பத்து வரை வேதத்தில் | கட்டாயம் தெரிய வேண்டியவை | One to Ten in the Bible

1.ஒன்றை செய்யுங்கள் :
* பின்னானவைகளை மறந்து, முன்னானவைகள் நாடு
( பிலிப்பியர் 3 : 13 - 20_)

2. இரண்டையும் விட்டுவிடாதிருங்கள் :
 * கிருபை
 * சத்தியம்
( நீதிமொழிகள் 3: 2 - 3)

 3. மூன்றில் நிலைத்திருங்கள்:
 * விசுவாசம்
 * நம்பிக்கை
 * அன்பு
( 1கொரிந்தியர் 13 : 13)

 4. நான்கையும் தரித்துக் கொள்ளுங்கள்:
 * இயேசு கிறிஸ்து
 * ஒளியின் ஆயுதங்கள்
 * புதிய மனுஷன்
 * நீடிய பொறுமை
( ரோமர் 13 : 14 / எபேசியர் 4 : 24 /கொலோசெயர் 3:12 )

 5. ஐந்தையும் அழித்துப் போடுங்கள்:
 * விபச்சாரம்
 * அசுத்தம்
 * மோகம்
 * துர் இச்சை
 * பொருளாசை
( கொலோசெயர் 3 : 5 , 6 )

 6. ஆறையும் எடுத்துக்கொள்ளுங்கள் :
 * சத்தியம் என்னும் கச்சை
 * நீதியென்னும் மார்க்கவசம்
 * சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை
 * விசுவாசமென்னும் கேடகம்
 * இரட்சணியமென்னும் தலைச்சீரா
 * தேவ வசனமாகிய ஆவியின் பட்டயம்
( எபேசியர் 6 : 13 - 18 )

 7. ஏழையும் வெறுத்து விடுங்கள் :
 * மேட்டிமையான கண்
 * பொய் நாவு
 * குற்றாமற்றவர்களுடைய இரத்தம் சிந்தும் கை
 * துராலோசனையைப் பிணைக்கும் இருதயம்
 * தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால்
 * அபத்தம் பேசும் பொய்சாட்சி
 * சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல்
( நீதிமொழிகள் 6 : 16 - 19)

 8. எட்டையும் விட்டுவிடாதீர்கள் :
 * விசுவாசம்
 * தைரியம்
 * ஞானம்
 * இச்சையடக்கம்
 * பொறுமை
 * தேவபக்தி
 * சகோதர சிநேகம்
 * அன்பு
( 2 பேதுரு 1 : 5 - 9)

 *9. ஒன்பதையும் அனுபவமாக்குங்கள் :*
          ஆவியின் கனிகள்
 * அன்பு
 * சந்தோஷம்
 * சமாதானம்
 * நீடிய பொறுமை
 * தயவு
 * நற்குணம்
 * விசுவாசம்
 * சாந்தம்
 * இச்சையடக்கம்
( கலாத்தியர் 5 : 22 - 23)
              ஆவியின் வரங்கள்
 * ஞானத்தை போதிக்கும் வசனம்
 * அறிவை உணர்த்தும் வசனம்
 * விசுவாசம்
 * குணமாக்கும் வரங்கள்
 * அற்புதங்களைச் செய்யும் சக்தி
 * தீர்க்கதரிசனம் உரைத்தல்
 * ஆவிகளப்பகுத்தறிதல்
 * பற்பல பாஷைகளை பேசுதல்
 * பாஷைகளை வியாக்கியானம்
( 1 கொரிந்தியர் 12 : 8 - 10 )

 10. பத்தையும் பற்றிக் கொள்ளுங்கள் :
          கர்த்தருடைய கற்பனைகள்
( யாத்திராகமம் 20 : 3 - 17 )


Post a Comment

0 Comments