Ad Code

கடவுள் காண்பிக்கும் அதிசயங்கள் | The Marvels God Shows | ஆகஸ்ட் மாதப்பிறப்பு அருளுரை

முகவுரை
உலகிலே ஏழு அதிசயங்கள் என்று சொல்லப்படுபவற்றை பார்த்திருக்கிறீர்களா? அதைக் காட்டிலும் அதிசயமான காரியங்கள் உலகில் உண்டு என்று சொன்னாலும் மறுக்க இயலாது. ஏன் நம்மை சுற்றியே நடைபெறும் காரியங்கள் நமக்கு அதிசயமாக அற்புதமாக தோன்றலாம். இதுவே இப்படி இருக்கும் என்றால், கடவுள் காண்பிக்கும் அதிசயங்கள் எப்படியிருக்கும்? அதற்கு பின்னால் அவர் வைத்திருக்கும் மறைபொருள் என்ன? சங்கீதக்காரர் தெளிவாக சொல்லுகின்றார் (சங்கீதம் 78.11): ஆண்டவருடைய செயல்களையும், அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள். இந்த சங்கீதத்தில், எகிப்தில் இருந்து எவ்வளவு அதிசயமாக இஸ்ரவேலரை கானானுக்கு நடத்தினார் என்பதைக் குறித்து பாடப்பட்டுள்ளது. 

1. கடவுள் காண்பிக்கின்றார்
சங்கீதம் 78.11 இல் பார்க்கிறபடி, கடவுள் தம் அதியங்களை நமக்கு காண்பிக்கின்றார். அதற்கு வரலாறும், நம் அனுபவமும் சான்று. கடவுள் தம் பக்கத்தில் சரியாக செயல்படுகிறார்? ஆனால் மனுக்குலத்தின் பக்கத்தில்???

2. மாம்சீக மனிதர் மறக்கின்றார்கள்
கண்ணாரக் கடவுளின் அதிசயங்களை கண்டவர்கள், இக்கட்டு வரும்போது, மாம்சீக போராட்டத்தில் குழம்பி, கடவுளின் செயல்களையும், வல்லமையையும் மறந்து விடுவது, தவறான முடிவிற்கு கொண்டு செல்லும். இறை நம்பிக்கையில் தடுமாற்றத்தை கொண்டுவர வழிவகுக்கும்.

நிறைவுரை
லூக்கா 5.26 இல் வாசிக்கிறோம்: "அதினாலே எல்லாரும் ஆச்சரியப்பட்டு, கடவுளை மகிமைப்படுத்தினார்கள், அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள்." திமிர்வாதக்காரனை இயேசுவிடம் படுக்கையோடே கொண்டு சென்று, வீட்டின் மேல் கூரையைப் பிரித்து இறக்கிய போது, அங்கு நடைபெற்ற அற்புதத்தை குறித்து தான் லூக்கா 5.18 - 26 வரை வாசிக்கிறோம். இயேசுவால் பாவ மன்னிப்பையும் கொடுக்க முடியும்; சரீர சுகத்தையும் கொடுக்க முடியும். அதை எல்லாருடைய கண்களும் காணும். கடவுள் தம் மக்களுக்கு அதிசயங்களை காண்பிப்பார் என்பது மாறாத உண்மை. ஆனால் அதை மக்கள் மறந்து விட்டார்கள் என்பது தான் கசப்பான உண்மை. ஆகவே, வரலாற்றில் உள்ளது மட்டுமல்ல, நம் கண்களால் கண்ட இறை அதிசயங்களையும் மறந்து விடாமல், இறை நம்பிக்கையோடு பயணிப்போம். இன்னும் கடவுள் பல அதிசயங்களை நமக்கு காண்பிப்பார். இறையாசி உங்களோடிருப்பதாக.

Post a Comment

0 Comments