பெரும்பாலும் இன்றைய சினிமா மக்களின் சிந்தனைகளை கெடுத்து, படுபாதகங்களை செய்வதற்கு தூண்டும் கருவியாகவே உள்ளது. இந்த சினிமா மோகம் பெரியவர் உட்பட சிறுவர்களிலும் அதிகம் தாக்கம் செலுத்தி வருகின்றது .
சினிமா மோகத்திற்கு அடிமையாக இருக்கும் வாலிபர்கள் திருமணமான பின்பும் அந்த அடிமைத்தனத்தில் இருந்து வெளியே வரமுடியாமல் தவிப்பது இயல்பு. இதனால் குடும்ப வாழ்வில் பலவிதமான பிரச்சினைகளை சந்திக்கும் சூழ்நிலை உருவாகின்றது.
கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகள் என சேர்ந்து நேரத்தை செலவிடாமல் வீணாக நேரத்தை சீரியலில் செலவழிப்பது சரியானதல்ல. சீரியலினால் தன் வீட்டில் செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் இருக்கும் பெண்கள் இருக்கிறார்கள். சீரியலை பார்த்து, குடும்ப வாழ்வில் சந்தேகங்கள், விரிசல், என பிரச்சினைகள் பெருகிவிட்டன.
தற்காலத்தில் ஆண் பிள்ளைகளின் கல்வி வீதம் குறைவடைவதற்கு இதுவே மூலக் காரணி என்று கூறினாலும் பொருத்தமாகும். நம் பிள்ளைகள் படித்து சிறந்த நிலைக்கு வர வேண்டுமானால், சினிமாவிற்கு நாமும் அடிமையாகாமல், நம் பிள்ளைகளும் அடிமையாகாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் பெற்றோரைவிட தங்களின் நண்பர்களுடன்தான் அதிக நேரம் இருக்கிறார்கள். நண்பர்களிடம்தான் மனம்விட்டு பேசுகிறார்கள். அப்படிப் பேசும்போது சினிமாதான் அவர்களின் முக்கியமான பேசுபொருளாக இருக்கிறது.
எங்கோ சினிமாவில் நடித்தவரை/வளை தாம் உபயோகிக்கும் அனைத்து சமூக வலைத்தளங்களில் Profile களாகவும், சினிமா பாடல்களை Status ஆகவும் வைக்கும் ஒரு சில பகுத்தறிவுள்ள ஜீவன்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
இசையை கேட்போரின் மனங்களில் தேவையற்ற உணர்ச்சியை கிளப்பி, சிந்தனையை பாவங்களின் பக்கம் திருப்பியது தான் இந்த சினிமா. சில திரைப்படங்கள் உளவியல்ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
பொழுபோக்கு என்பதையும் தாண்டி, மனதில் ஊடுருவும் தன்மை சினிமா, சீரியல் மற்றும் திரைப்படங்களுக்கு இருப்பதால், நாம் அப்படியே அவற்றில் மூழ்கிவிடாமல் வாழ வேண்டும். "கண்ணானது சரீரத்தின் விளக்கு" என்ற இறை வார்த்தையை மறந்துவிடக் கூடாது. எல்லாக் காவலோடும் நம் இருதயத்தைக் காத்துக் கொள்வோம்.
0 Comments