Ad Code

குடும்பத்தை அழிக்கும் செல்போன் | Phones and Family | புதிதாக திருமணமான இளம் தம்பதியருக்கு ஆலோசனை


கணவனுக்கும் மனைவிக்கும் இடையே செல்போன் (Cell Phone) மிகப்பெரிய தடைக்கல்லாக இன்று இருக்கின்றது. திருமணமான பின்பும், இன்னும் தனிநபர் (Single) போல் செல்போனில் கேம்ஸ், வீடியோ பார்ப்பது போன்றவை சரியல்ல. குடும்பஸ்தன் என்ற நிலைக்கு முதிர்ச்சியடைய வேண்டும். தேவையில்லாத apps ஐ அழித்து விடுவது நன்று. 

இன்றைக்கும் கணவன் ஒரு பக்கம், மனைவி ஒரு பக்கம் என்று உட்கார்ந்து செல்ஃபோன் பயன்படுத்துவது சகஜமாகி விட்டது. இதனால் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசக்கூட வாய்ப்புகள் இல்லை கணவனோடு / மனைவியோடு நேரத்தை செலவிடுவது முக்கியம்.

இன்றைக்கு ஒரே வீட்டில் வாழும், கணவன், மனைவி, பிள்ளைகள் நேரில் தொடர்பு கொள்வதைக் காட்டிலும், சட்டிங் (Chat) மூலமாக தகவல்களை தொடர்பு கொள்வது பெருகிவிட்டது. தங்கள் மன விருப்பங்களை, தேவைகளை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், ஃபேஸ் புக் என பதிவிடுவது பெருகிவிட்டது. இது உறவை வளர்க்காது.
அமெரிக்காவில் சமீபத்தில் வெளிவந்த ஆய்வு முடிவில், குழந்தைகளைவிட அதிகமாக செல்போனுக்கு அடிமையாகியிருப்பது அவர்களின் பெற்றோர்கள்தாம் என்பது தெரியவந்திருக்கிறது. நாம் அதிகமாக செல்ஃபோன் பயன்படுத்தினால், நம்மைப் பார்த்து, பிள்ளைகள் செல்போன் பயன்படுத்த ஆரம்பிக்கும். நாம் மாறாமல், நம் பிள்ளைகளை சரியாக வளர்த்து விடலாம் என்று எண்ணுவது தவறு. 

பெற்றோர்கள் தூங்கச் செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர்வரை செல்போன் பயன்படுத்துவதைப் பெற்றோர்கள் நிறுத்துவதில்லை. குடும்பத்தில் பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசுவதை விட, செல்போனில் யாருடனோ அல்லது யாரோ அனுப்பிய செய்திகளை, காட்சிகளைப் பார்ப்பது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இது மிகப்பெரிய தவறு. படுக்கைக்கு (Bed) செல்ஃபோன் கொண்டுபோகாமல் இருப்பது உடல் மற்றும் மனதிற்கு நன்று.
குடும்பம் என்ற கட்டமைப்பு உடைவதில் இன்று செல்போன்களின் பங்கு அதிகம். செல்போன் பயன்படுத்தும் போது அதிக கவனத்துடன் இருப்பது அவசியம். இல்லையென்றால் உறவில் விரிசல் தான் எட்டி பார்க்கும்.

திருமணம் கடவுள் ஏற்படுத்திய புனிதமான வாழ்வு. குடும்ப வாழ்க்கையின் மூலமாக கடவுளை மகிமைப்படுத்த, சாட்சியுள்ள வாழ்வு முக்கியம். கடவுளுக்கு பயந்து, உண்மையான அன்பை வெளிப்படுத்தி வாழ்வோம்.

Post a Comment

0 Comments