இந்திய தேசத்திலேயே முதன்முறையாக காதுகேளாதோருக்கென்று திருப்பணி ஆரம்பிக்கப்பட்ட பெருமை நம் திருநெல்வேலி திருமண்டலத்தையே சாரும். 1997 ஆம் ஆண்டுதிருநெல்வேலி திருமண்டல காதுகேளாதோர் திருப்பணி பாளையங்கோட்டையில் ஆரம்பிக்கப்பட்டது. இத்திருப்பணியின் மூலமாக காதுகேளாதோர் மத்தியில் ஆவிக்குரிய பணியும், சமூகப் பணிகளும் நடைபெறுகின்றன. அவ்வாறாக, அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக தையல் பிரிவு செயல்படுகின்றது.
திருநெல்வேலி குலவணிகர்புரத்தில் அமைந்துள்ள காதுகேளாதோர் மையத்தில் தையல் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு தைத்துக் கொடுக்கப்படக்கூடியவை:
✨ஆலய திருமேசை விரிப்புகள்
✨ பேராயர் திருவுடைகள்
✨குருமார் திருவுடைகள் (Cassock, Surplise, Stole)
✨பாடகர் குழு ஆடைகள்
மாற்றுத்திறன் படைத்த இவர்களைக் கொண்டு இந்த பணிகள் நடைபெறுகின்றது. இங்கு தரமான முறையில், குறிப்பிட்ட நேரத்தில், நேர்த்தியான விலையில், தைத்துக் கொடுக்கப்படுகின்றது. இங்கு தைப்பதன் மூலமாக காதுகேளாதோர் திருப்பணிக்கும், காதுகேளாத மக்களுக்கும் உதவுகின்றோம்.
தொடர்பு முகவரி:
சிட்டென்டன் காதுகேளாதோர் மையம்
எண் 1, அம்பை ரோடு, குலவணிகர்புரம்,
திருநெல்வேலி - 627 002
📞 0462 2581610
☎️ 7806521842
📨 chittendendeafcentre@gmail.com
0 Comments