"தினமும் திருச்சபைக்காக" என்ற தின ஜெபத்தொடரில் பங்கெடுத்து, சி.எஸ்.ஐ திருநெல்வேலி திருமண்டலத்திற்காக ஜெபிக்கின்ற உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள்.
இன்றைய நாளுக்கான சேகரம்:
மனகாவலம்பிள்ளை நகர் சேகரம் (MKP)
(மத்திப சபைமன்றம்)
சபை (1)
பரிசுத்த பேதுரு ஆலயம், மனகாவலம்பிள்ளை நகர்
வீட்டு ஆராதனை (1)
செட்டிகுளம் அருகாமையில் உள்ள வீரப்பன் காலனி என்ற பகுதியில் வீட்டு கூட்டம் நடைபெறுகிறது.
சேகரத் தலைவர்:
Rev. P. ஆமோஸ் செல்வராஜ்
சபை ஊழியர்:
திரு. G. தினகராஜ்
குடும்பங்கள் எண்ணிக்கை:
சுமார் 435 மேல்
தற்போதைய விண்ணப்பங்கள்:
நடைபெற்று வருகிற புதிய ஆலய கட்டுமான பணிக்காக.....
புதிதாக, ஆலய உபதேசியார் மற்றும் கோவில் பணியாளர் வீடு கட்டப்பட.....
இச்சபையில் 30 வயதிற்கு மேற்பட்ட வாலிப ஆண்கள் மற்றும் பெண்கள் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கிறவர்களுக்கு திருமண வாழ்வு வாய்க்க.....
வேலை இல்லாமல் இருக்கிறவர்களுக்கு வேலை கிடைக்க ..... .
அரசாங்க தேர்வு எழுதிக் கொண்டிருக்கிறவர்களுக்காக.....
இருதய நோயாளிகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நுரையீரலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக.......
திருச்சபையில் உள்ள ஏழைகள் மற்றும் விதவைகளின் நல்வாழ்விற்காக.......
மதுபானத்திற்கு அடிமைகளாக உள்ள ஆண்கள் மது பழக்கத்திலிருந்து விடுதலை பெற......
வியாழக்கிழமைகள் தோறும் புறமதத்திற்கான ஜெபம் நடைபெறுகிறது. இரவு 7 மணி முதல் 8 மணி வரை சுமார் 35 நபர்கள் புறமதத்தினரை சேர்ந்தவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்னும் ஆண்டவருடைய அன்பை தெரிந்து கொள்ளவும் அவர்களின் குடும்பத்தார் அனைவரும் ஆண்டவரை ஏற்றுக் கொள்ள......
சபை மக்கள் யாவரும் ஆண்டவருடைய அன்பை ருசித்து பார்க்கவும், சாட்சியாக வாழவும்...
கிறிஸ்துவின் பாதையில் வளர்ந்து பெருக கருத்துடன் ஜெபிப்போம். இறையாசி நம்மோடிருப்பதாக.
- www.meyego.in
0 Comments