Ad Code

Dangers of Pain Killers வலி நிவாரணிகள் Pain Killers..!!

நமக்கு எப்போதெல்லாம் தலைவலி, உடல் வலி, முதுகுவலி, மூட்டுவலி என ஏற்படுகிறதோ அப்போது நாம் வலி மாத்திரைகளை சாப்பிடுகின்றோம். சிறிது நேரத்தில் வலியும் மறைந்து விடுகிறது. நோய் நீங்கிவிட்ட திருப்தியில் நாமும் மற்ற வேலைகளை பார்க்கத் தொடங்கி விடுகின்றோம்.

*வலி எவ்வாறு நீங்கியது?*

நமது ஐம்புலன்கள் வழியாக ஒவ்வொரு நொடியும் முளைக்குத் தகவல்கள் சென்ற வண்ணமாக இருக்கும்.

உதாரணமாக, நீங்கள் கண்களை மூடி அமைதியாக அமர்ந்து இருக்கின்றீர்கள்.
அந்த நேரத்தில் ஒருவர் உங்கள் கையில் ஒரு இடத்தில் தொடுகின்றார் என வைத்துக் கொள்வோம். அவர் தொடும் அந்த தகவலை அங்குள்ள உணர்வு நரம்புகள் (Sensory Nerves) மூளைக்கு எடுத்துச் சென்று தெரிவிக்கும். உடனே மூளை, ஒருவர் உங்களை தொடுகின்றார் என்கிற செய்தியை உங்களுக்கு உணரச் செய்யும். மூளைக்கு இந்த தகவல் தெரியவில்லை என்றால், அவர் தொடும் செயல்பாடுகளை உங்களால் உணர முடியாது. 

அதே போல் உடலின் ஒரு பகுதியில் வலி ஏற்படும் போது முதுகு தண்டுவடத்திற்குள் உள்ள மிக நுண்ணிய நரம்புகள், அந்த தகவலை நமது மூளைக்கு எடுத்துச் சென்று தெரிவிக்கின்றன. எப்போது மூளைக்கு 
வலி தெரிய ஆரம்பிக்கின்றதோ அப்போது தான் நமக்கு இந்த குறிப்பிட்ட இடத்தில் வலி ஏற்பட்டுள்ளது என்பதை அறிகின்றோம். முளை அறிவிக்காமல் வலி நமக்கு தெரியாது.

நாம் வலிக்காக மாத்திரைகள் சாப்பிடும் போது என்ன நடக்கின்றது?
நமக்கு ஏற்படும் வலியை மூளைக்கு எடுத்துச் சென்று அறிவிக்கும் உணர்வு நரம்புகளை, வலி மாத்திரைகள் போதையூட்டி உணர்வு இழக்க செய்கின்றது. மாத்திரையின் மூலம் நரம்புகளில் ஏற்படும் இந்த உணர்வற்ற நிலையின் காரணமாக மூளைக்குச் செல்லும் தகவல் தடைபடுகிறது. அதனால் நமக்கு வலி தெரிவதில்லை. 

எவ்வாறு போதையில் இருக்கும் ஒரு குடிகாரனை அடித்தாலும், உதைத்தாலும் அவனுக்கு எதுவும் தெரியாதோ அதே நிலைதான் வலி மாத்திரைகள் சாப்பிடும் போதும் நமக்கு ஏற்படுகிறது.

ஆரம்பத்தில் சாதாரணமாக குறைந்த பவரில் வலி மாத்திரை சப்பிடுவீர்கள். தொடர்ந்து வலி மாத்திரைகள் எடுக்கும் போது உணர்வு நரம்புகள் பலவீனமடையும். அதன் காரணமாக உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும். பிறகு மாத்திரை எடுத்தாலும் அப்போது வலி குறையாது. எனவே அதிக பவரில் அல்லது இரண்டு மாத்திரைகள் என சாப்பிட ஆரம்பிப்பீர்கள். இறுதியில் உணர்வு நரம்புகள் உணர்ச்சியற்ற நிலையை அடையும் போது எந்த பவருக்கும் வலி குறையாது. 

இந்த நிலைதான் பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கும் ஏற்பட்டது. அவர் முகத்தை மாற்றிக் கொள்ள பல முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதால் வலி நிவாரணிகளை அடிக்கடி எடுக்க நேரிட்டது. பிறகு அதுவே அவருக்கு இறப்பை வரவழைத்தது.

மூளைக்கும் உணர்வு நரம்புகளுக்கும், உடல் உள்ளுருப்புகளுக்கும் உள்ள தொடர்புகள் துண்டிக்கப் பட்டுள்ள நிலைதான் கோமாவுக்கும், பக்கவாதத்திற்கும் காரணமாகும்.

ஒரு வலி மாத்திரையின் பவர் சுமார் 4 மணி நேரத்திலிருந்து 6 மணி நேரம் வரை நீடித்து இருக்கும். மாத்திரையின் பவர் குறையும் போது உடல் இயற்கையின் நோய் எதிர்ப்புச் சக்தி் காரணமாக மீண்டும் நரம்புகள் உணர்வுகளை பெறுகின்றன. மறுபடியும் நமக்கு வலி தெரிய ஆரம்பிக்கின்றது உடனே திரும்பவும் வலி மாத்திரையை போடுகிறோம். அதனால் தான் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 வேலை மாத்திரைகள் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. 

*மாத்திரையின் பவர் எப்படி குறைகிறது?*

நமது உடல், இயற்கையின் படைப்பு. எனவே இந்த உடல் இயற்கையான பொருட்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும். மருந்துகள் என்பது செயற்கையான இரசாயனங்களாகும். (Chemicals).

இந்த இரசாயனம் உடலினுள் செல்லும் போது, வயிறு அதை நிராகரிக்கிறது. நமது கல்லீரல் அதை இனங்கண்டு அந்த விஷங்களை நீக்கி, சிறுநீரகத்திற்கு அனுப்புகிறது. சிறுநீரகங்கள் சிறுநீர் வழியாக அதை வெளியே தள்ளுகிறது. 

உதாரணமாக நீங்கள் ஒரு சத்து மாத்திரையை சாப்பிட்டால் உங்கள் சிறுநீர் மஞ்சளாகப் பிரிவதை காணலாம். மேலும் சற்று கவனித்தீர்களனால் நீங்கள் சாப்பிட்ட மாத்திரையின் வாசனையும் அந்த சிறுநீரில் வீசுவதை உணரலாம். கலரும், வாசனையும் இல்லாத மருந்துகளில் இதை உணரமுடியாது.

சிறுநீர் மூலம் மருந்துகளின் விளைவுகள் உடலிலிருந்து நீங்கியவுடன் திரும்பவும் வலி தோன்ற ஆரம்பிக்கும். 

உடலின் இயற்கை தேவைகளுக்காக செயலாற்றிக் கொண்டிருக்கும் கல்லீரலும், சிறுநீரகங்களும் நாம் சாப்பிடும் மருந்துகளின் விஷங்களை நீக்க வேலை செய்யும் போது அதன் உறுதித் தன்மை குறைகிறது. அவைகள் இரு மடங்கு அதிகமாக வேலை செய்ய நேரிடுகிறது. ( Over Time Work) இதனால் தான் மாத்திரைகள் சாப்பிட்டால் கல்லீரல், சிறுநீரகங்கள் கெட்டுப்போய் செயலிழக்கும் எனச் சொல்லப்படுகிறது.

மருந்துகள் சாப்பிட்டு வலி நீங்கியவுடன் நோய் குணமாகி விட்டதாக நினைத்துக் கொள்கின்றீர்கள். நிச்சயமாக இல்லை. மேலே குறிப்பிட்டது போல் உங்களுக்கு வலி மட்டும் தான் மறக்கடிக்கப் பட்டுள்ளது. வலி உண்டானதற்கான காரணம் உங்கள் உடலிலிருந்து இன்னும் நீக்கப்படவில்லை. நோய் உடலுக்குள்லேயே அதன் போக்கில் வளர்ந்து கொண்டிருகின்றது.

நாளடைவில் அந்த நோய்க்கான காரணம் குணப்படுத்தப் படாமல், மருந்துகளால் உடலுக்குள் அழுத்தப்பட்டு நோய் முற்றி போகும்போது, பதிக்கப்பட்ட அந்த உறுப்பை வெட்டி ஏறியும் ஆப்பரேஷன் என்கிற நிலைமைக்கு தள்ளப்படுகிறது. 

வலி உண்டான உடன் அதற்கு காரணமான நோயை ஆரம்பத்திலேயே குணப்படுத்தப் பட்டிருந்தால் ஆப்பரேஷன் என்கிற நிலையே தேவைப்படாது. 

இலகுவாக கிடைக்கின்றது என்பதற்காக வலி மாத்திரைகளை அடிக்கடி உட்கொள்ளாதீர்கள். அது பெரும் கேடுகளை விளைவிக்கும். 

வலி நிவாரணிகள் குடலைப் பாதுகாக்கும் Mucus Membrane என்கிற லேயரை அரித்து அல்சரை உண்டாக்கும். வயிற்று எரிச்சல், நெஞ்செரிச்சல், வாந்தி என்று சாதாரணமாக ஆரம்பிக்கிற அறிகுறிகள் நாளடைவில் இரைப்பை அழற்சி, வயிறு புண், பக்கவாதம், மலட்டுத் தன்மை, மாரடைப்பு, கல்லீரல், சிறுநீரக செயலிழப்பு என்று பெரிய விளைவுகளை ஏற்படுத்தி வி்டும். என்ன வகையான வலி நிவாரணிகளைப் பயன்படுத்துகின்றீர்கள், எப்படி பயன்படுத்துகின்றீர்கள் என்பதைப் பொறுத்து விளைவுகளும் மாறும். இந்த வலி நிவாரணிகளில் பாதுகாப்பானவை என்று எதுவும் இல்லை.

கடுமையான தாங்க முடியாத வலிகளுக்கும், அவசரத் தேவைகளுக்கும் மட்டும் ஓரிரு மாத்திரைகள் சாப்பிடலாம். தொடர்ச்சியாக சாப்பிடக்கூடாது. வலிக்கான சரியான காரணத்தை கண்டுபிடித்து அதை முறையாக குணப்படுத்தி கொள்வதே ஆரோக்கியமாகும். 

அடிக்கடி வலி மருந்துகள் எடுக்க வேண்டாம் என்று அனைத்து மருத்துவர்களும் கூறுவார்கள். ஒரு மருத்துவத்தில் உங்கள் வலியோ, நோயோ குணம் அடையவில்லை என்றால் Homeopathy, Acupuncture போன்ற மற்ற துறை மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுங்கள். 

பெரும்பாலும் தலை வலிக்காகத்தான் அதிக அளவில் வலி மாத்திரைகள் எடுக்கப் படுகின்றன. தலைவலி பல காரணங்களால் வரலாம். ஆனால் டென்ஷன், துக்கமின்மை காரணமாகத்தான் அதிகமான தலைவலிகள் வருகின்றன. இதற்கு மாத்திரை எடுக்காமல் சற்று ஓய்வெடுத்தாலோ அல்லது தூங்கினாலோ வலி நீங்கிவிடும். 

மற்ற வலிகளாக இருந்தாலும் தாங்கிக் கொள்ளக் கூடிய அளவில் வலிகள் இருந்தால் அதற்கு மாத்திரைகள் சாப்பிடாமல் இருப்பதே சிறந்தது. 

சில வலிகள் எதனால் வருகிறது என்று உங்களுக்கே தெரியும். உதாரணமாக வயிறு வலிக்கிறது என்றால் அது செரிமான பிரச்சனை, வாயுக் கோளாறு அல்லது உஷ்ணத்தால் இருக்கலாம். 

செரிமான கோளாரால் வயிற்று வலி வந்தால் சிறிது சிறிதாக கொஞ்சம் சுடுநீர் குடித்தால் சரியாகிவிடும்.

வாயுக் கோளாரால் வலி ஏற்பட்டால் கொதிக்கவைத்த ஜீரக தண்ணீர் குடித்தால் சிறிது நேரத்தில் வலி குறைந்துவிடும்.

உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்று வலிக்கு 
கொஞ்சம் வெந்தயம் சாப்பிட்டால் சரியாகி விடும்.

இவ்வாறு அன்றாடம் ஏற்படும் சில உடல் நல பிரச்சனைகளுக்கு வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு நலமடையலாம்.
முடியாத பச்சத்தில் மருத்துவரை அனுகலாம்.
உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில். 

Acknowledgement 
Dr. Gouse, MD (Acu,Tcm)., Singapore.

Post a Comment

0 Comments