திருமறை ஆதாரம்
மத்தேயு 21:1-11
மாற்கு 11:1-11
லூக்கா 19:28-44
யோவான் 12:12-19
இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்புடன் நுழைந்ததை கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் நினைவுபடுத்தும் ஒரு நிகழ்வுதான் குருத்தோலை ஞாயிறு ஆகும். வழக்கமாக யூதர்கள் எல்லோரும் எருசலேம் நகரில் ஒன்று கூடி இந்த பஸ்கா விழாவை கொண்டாடுகின்றனர். இந்த பஸ்கா விழாவை கொண்டாட இயேசுவும் வருகிறார். அப்படி அவர் வரும் போது, இயேசுவானவர் கழுதையின் மீது ஏறி யூதேயா தேசத்தின் தலைநகரான எருசலேம் நகருக்கு செல்கிறார். அக்காலத்தில் யுத சமூக மரபுப்படி ஆளுநர்கள், அரசர்கள், தலைமைக் குருக்கள் மட்டுமே கழுதை மேல் அமர்ந்து நகர் வலம் வருதல், கம்பள வரவேற்பு பெறுதல் ஆகிய உயர் பெருமை நிலையைப் பெற்றிருந்தனர். அதே போல், இயேசு வரும் போது, அங்குள்ள மக்கள் அவருக்கு வரவேற்பு கொடுக்கும் விதமாக ஒலிவமலை குருத்து இலைகளால் வழிநெடுகிலும் பரப்பினார்கள்.
இப்படி மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி செல்லும் போது தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்தரிக்கப்பட்டவர் என்று கோஷம் எழுப்பினர். ஓசன்னா என்றால் “இப்போது இரட்சியும்” என அர்த்தம். இப்படியாக வழிநெடுகிலும் வரவேற்பு கொடுத்த மக்கள் இன்னும் சில நாட்களில் இவரை சிலுவையில் அறையுங்கள், சிலுவையில் அறையுங்கள் என்று சொல்லப்போவது இயேசுவுக்கு தெரிந்தும் அவர்கள் கொடுத்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
0 Comments